ஜவுளித்துறை அமைச்சகம்
புவிசார் குறியீடு தொடர்பான ஜவுளி அமைச்சகத்தின் மாநாடு - மத்திய அமைச்சர் திரு கிரிராஜ் சிங் பங்கேற்பு
Posted On:
25 NOV 2024 4:59PM by PIB Chennai
கைத்தறி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலுடன் இணைந்து ஜவுளி அமைச்சகத்தின் கைத்தறி மேம்பாட்டு ஆணையர் அலுவலகம் ஏற்பாடு செய்துள்ள புவிசார் குறியீடு தொடர்பான உச்சி மாநாடு இன்று புதுதில்லியில் நிறைவடைந்தது. புவிசார் (ஜிஐ) குறியிடப்பட்ட இந்தியாவின் கைத்தறி, கைவினைப் பொருட்கள் உற்பத்தி தொடர்பாகவும், அவற்றின் தனித்துவமான திறன்கள் குறித்தும் இந்த நிகழ்வு எடுத்துரைத்தது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங் இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை ஊக்குவிப்பதில் புவிசார் குறியீடு தயாரிப்புகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். புவிசார் குறியீடு பெற்ற தயாரிப்புகளை எவ்வாறு உலகளவில் கொண்டு செல்வது என்பதில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
ஜவுளித்துறை இணையமைச்சர் திரு பபித்ரா மார்கெரிட்டா பேசுகையில், கைத்தறி துறை வெறும் தொழில் மட்டுமல்ல என்றும், அது நமது நாட்டின் பன்முகத்தன்மை, படைப்பாற்றல், பாரம்பரியத்தின் சான்றாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.
ஜவுளித்துறை செயலாளர் திருமதி ரச்சனா ஷா, கைத்தறி வளர்ச்சி ஆணையர் டாக்டர் எம்.பீனா, கைவினைப் பொருட்கள் மேம்பாட்டு ஆணையர் அம்ரித் ராஜ், ஜவுளி ஆணையர் ரூப் ராஷி, காப்புரிமை, வர்த்தக முத்திரை-புவிசார் குறியீடு கட்டுப்பாட்டாளர் திரு. உன்னத் பண்டிட் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
***
TS/PLM/AG/DL
(Release ID: 2077035)
Visitor Counter : 12