தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
iffi banner
0 6

ஐ.எஃப்.எஃப்.ஐ-இன் 55-வது பதிப்பில் 'திரைப்பட கதை சொல்லலுக்கான சூழலாக கலாச்சாரம்' பற்றிய குழு விவாதம் நடைபெற்றது

கோவாவில்  நடந்து வரும் 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில்  'திரைப்பட கதை சொல்லலுக்கான சூழலாக கலாச்சாரம்' பற்றிய குழு விவாதம்  நடைபெற்றது. புகழ்பெற்ற எழுத்தாளர்களான டாக்டர் சச்சிதானந்த் ஜோஷி மற்றும் அமிஷ் திரிபாதி, பிரபல திரைப்பட இயக்குனரும் திரைக்கதை எழுத்தாளருமான பரத் பாலா உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர். "எனது தந்தை ஒரு சுதந்திர போராட்ட வீரர், வந்தே மாதரம் பாடலை 90 களின் தலைமுறையினரை மிகவும் கவர்ந்திழுக்கச் செய்ய வேண்டும் என்ற அவரது வேண்டுகோளுக்கு இணங்க, ஏ.ஆர்.ரஹ்மானின் பிரபலமான 'வந்தே மாதரம்' ஆல்பத்தை உருவாக்கினேன்" என்று பரத் பாலா கூறினார்.

 

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் 1000 கதைகள் மூலம் இந்தியாவை விவரிக்கும் மெய்நிகர் பாரத் என்ற புதிய திட்டத்தில் பணியாற்றி வருவதாக திரு பாலா தெரிவித்தார். "திரைப்படங்களை உருவாக்க எந்த கதையைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதை தயாரிப்பாளர் அல்லது இயக்குநர் தீர்மானிக்கும் தற்போதைய முறைக்கு மாறாக, திரைப்படங்களின் கிரவுட் ஃபண்டிங், பொது மக்களுக்கு அவர்கள் பார்க்க விரும்பும் கதைகளைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை வழங்கும்", என்று அவர் தெரிவித்தார்.

 

'தி சிவா ட்ரைலாஜி' மற்றும் 'ராம் சந்திரா சீரிஸ்' ஆகியவற்றின் பிரபல எழுத்தாளர் அமிஷ் திரிபாதி, இப்போது பல தசாப்தங்களாக, திரைப்படங்கள் சமூகத்தின் யதார்த்தங்களை சித்தரிக்கின்றன என்று கூறினார். "நமது பண்டைய இலக்கியங்கள் வழங்கும் மாறுபட்ட கதைகளைப் பயன்படுத்துவதில் இந்தி திரையுலகம் பின்தங்கியுள்ளது, அதே நேரத்தில் பிராந்திய சினிமா அத்தகைய கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் சிறப்பாக உள்ளது" என்று அவர் குறிப்பிட்டார்.

 

பிரபல எழுத்தாளரும், இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் (ஐ.ஜி.என்.சி.ஏ) உறுப்பினர் செயலாளருமான சச்சிதானந்த் ஜோஷிநமது வீடுகளில் முதியவர்கள் பாரம்பரிய கதைகளை சொல்லி வந்தனர். மொபைல் போன்கள் இந்த பாரம்பரிய கதை சொல்லலை இல்லாமல் ஆக்கி வருகின்றன என்று கூறினார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2076696

 

 

(Release ID: 2076696)

TS/BR/KR

iffi reel

(Release ID: 2076746) Visitor Counter : 5