குடியரசுத் தலைவர் செயலகம்
சாகித்ய ஆஜ் தக் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ஆஜ் தக் சாகித்ய ஜாக்ரிதி விருதுகளை குடியரசுத்தலைவர் வழங்கினார்
Posted On:
23 NOV 2024 7:48PM by PIB Chennai
இந்தியக் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, நவம்பர் 23, 2024 அன்று புதுதில்லியில் நடைபெற்ற சாகித்ய ஆஜ் தக் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆஜ் தக் சாகித்ய ஜாக்ரிதி விருதுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், 'ஆஜ் தக் சாகித்ய ஜாக்ரிதி விருதின்' வெற்றியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். குறிப்பாக 'ஆஜ் தக் சாகித்ய ஜாக்ரிதி வாழ்நாள் சாதனையாளர் விருது' பெற்ற குல்சார் சாஹேப்பிற்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். இலக்கியம் மற்றும் கலை உலகிற்கான அவரது அர்ப்பணிப்புக்காக திருமதி முர்மு அவரைப் பாராட்டினார்.
விருது பெற்றவர்களின் சிறந்த படைப்புகள் கடந்த காலம் முதல் இன்று வரை இந்தியாவின் பன்முகத்தன்மையை பிரதிபலிப்பதுடன், பல தலைமுறை எழுத்தாளர்களை ஒன்றாக அறிமுகப்படுத்துவது குறித்து குடியரசுத்தலைவர் மகிழ்ச்சி தெரிவித்தார். பான்-இந்தியா உணர்வு நம் நாட்டின் பிராந்திய இலக்கியப் படைப்புகளில் எப்போதும் உள்ளது என்று அவர் கூறினார். இந்த உணர்வு ராமாயணம் மற்றும் மகாபாரத காலங்களிலிருந்து, நமது சுதந்திரப் போராட்டம் வரையிலான நமது பயணம் முழுவதும் காணப்படுகிறது, இன்றைய இலக்கியங்களிலும் இதைக் காணலாம்.
இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த இந்தியா டுடே குழுமத்தை குடியரசுத்தலைவர் பாராட்டினார். பிராந்திய இலக்கியத்தை வெகுஜனங்களிடம் கொண்டு சேர்க்க இக்குழு பாடுபட வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். அடித்தட்டு மக்களின் இலக்கியத்தை ஊக்குவிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். இலக்கியத்தின் மறைக்கப்பட்ட ரத்தினங்களை இந்தக் குழு வெளிக்கொணர வேண்டும் என்று அவர் கூறினார்.
இலக்கியம் மனிதகுலத்திற்கு அதிகாரம் அளிப்பதாகவும், சமுதாயத்தை மேம்படுத்துவதாகவும் குடியரசுத்தலைவர் கூறினார். மாறிவரும் சூழ்நிலைகளுக்கேற்ப மானுடத்தின் சாசுவதமான மாண்புகளை இலக்கியம் வடிவமைக்கிறது. இலக்கியம் சமூகத்திற்கு புதிய வாழ்வைத் தருகிறது. பல துறவிகளும் கவிஞர்களும் மகாத்மா காந்தியின் சிந்தனைகளில் தாக்கத்தை ஏற்படுத்தினர். இலக்கியத்தின் இத்தகைய தாக்கம் மதிக்கப்பட வேண்டும், என்றார் அவர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2076421
**************
BR/KV
(Release ID: 2076521)
Visitor Counter : 52