தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
முத்தான திரைப்படங்களை அறிமுகப்படுத்திய 55-வது ஐ.எஃப்.எஃப்.ஐ
55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (ஐ.எஃப்.எஃப்.ஐ) மூன்று தனித்துவம் வாய்ந்த திரைப்படங்களைக் காட்சிப்படுத்தியது. அவை, குஜராத்தி திரைப்படமான 'கர்கானு', அசாமிய திரைப்படமான 'ராடோர் பாகி' மற்றும் 'கூகிள் மேட்ரிமோனி' ஆகியவையாகும். தொலைநோக்கு சிந்தனை கொண்ட இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களால் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படங்கள் சஸ்பென்ஸ், நகைச்சுவை, திகில், உண்மையான மனித இணைப்புக்கான தேடல் மற்றும் வாழ்க்கையின் சவால்களைத் தழுவுவதற்கான வலிமை ஆகியவற்றின் ஆழமான கருப்பொருள்களை ஆராய்கின்றன.
பத்திரிகையாளர் சந்திப்பின்போது பேசிய, 'கர்கானு' படத்தின் இயக்குநர் ருஷப் தங்கி, இந்தப் படம் குஜராத்தின் நாட்டுப்புறக் கதைகளில் ஆழமாக வேரூன்றியுள்ளது என்று கூறினார். ஆரம்பத்தில் ஒரு குறும்படமாக உருவாக்கப்பட்டு, பின்னர் இது ஒரு முழு நீள படைப்பாக விரிவுபடுத்தப்பட்டது.
'கூகுள் மேட்ரிமோனி' படத்தைப் பொறுத்தவரை, இயக்குநர் ஸ்ரீகார்த்திக் எஸ்.எஸ், இது ஒரு ஆந்தாலஜியின் ஒரு பகுதி என்று விளக்கினார். தொழில்நுட்பம், வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது என்பதை இந்தக் கதை ஆராய்கிறது என்று திரைப்பட தயாரிப்பாளர் அபினவ் ஜி ஆத்ரே குறிப்பிட்டுள்ளார்.
'ராடோர் பாகி' படத்தின் இயக்குநர் டாக்டர் பாபி ஷர்மா பருவா, இந்தப் படத்தை முதுகெலும்பு தசைநார் அட்ராபி கொண்ட ஒரு பெண்ணின் உணர்ச்சிகரமான சித்தரிப்பு என்று விவரித்தார். படத்தின் தொனியைப் பற்றி கேட்டபோது, இது ஒரு உண்மையான, இதயப்பூர்வமான கதையை அடிப்படையாகக் கொண்டது என்று அவர் விளக்கினார்.
திரைப்படங்களைப் பற்றி:
கர்கானு - 'கர்கானு', 'இந்திய திரைப்படப்' பிரிவில் காட்சிப்படுத்தப்பட்டு, குஜராத்தின் முதல் 'ஸ்மார்ட் ஹாரர் காமெடி' ஆக அறிமுகமாகிறது. சஸ்பென்ஸ், நகைச்சுவை மற்றும் திகில் ஆகியவற்றின் பரபரப்பான கலவையான இந்தப் படம், மறக்க முடியாத அனுபவத்தை உறுதியளிக்கிறது.
கூகுள் மேட்ரிமோனி - 'கூகுள் மேட்ரிமோனி' 'இந்திய கதை அம்சம் அல்லாத திரைப்படங்கள்' பிரிவில் காட்சிப்படுத்தப்படுகிறது. தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் உலகில் உண்மையான மனித இணைப்புக்கான தேடலை இந்தப் படம் ஆராய்கிறது. அங்கு யதார்த்தமும் மாயையும் பெரும்பாலும் பின்னிப்பிணைந்துள்ளன, மேலும் அன்பும் ஏற்றுக்கொள்ளலும் இறுதி ஆசைகளாக உள்ளன.
ராடோர் பாகி -‘ராடோர் பாகி’, அஸ்ஸாமைச் சேர்ந்த ஆர்வமுள்ள எழுத்தாளர் ஜோதி, முதுகெலும்பு தசைநார் அட்ராபி நோயால் பாதிக்கப்பட்டு, படுக்கையில் இருக்கும் உண்மைக் கதையைச் சொல்கிறது. உடல் ரீதியான சவால்கள் இருந்தபோதிலும், அவர் ஒரு எழுத்தாளராக வேண்டும் என்ற தனது கனவைத் தொடர்கிறார். இந்த படம் அவரது பயணத்தை எடுத்துக்காட்டுகிறது, மனித உணர்வின் நெகிழ்தன்மையையும் , ஒருவரின் கனவுகளைப் பின்பற்றுவதற்கான தடைகளைத் தாண்டுவதில் காணப்படும் வலிமையையும் காட்டுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2076445®=1&lang=1
****************
BR/KV
(Release ID: 2076520)
Visitor Counter : 8