மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மின்னணு பொம்மை ஹேக்கத்தானை அறிவித்துள்ளது
Posted On:
23 NOV 2024 6:49PM by PIB Chennai
மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய பொம்மை தொழில் துறை மற்றும் சில அமைப்புகளுடன் இணைந்து 'மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கட்டுப்பாடு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஓராண்டு பயிற்சி பெற்ற பொறியியல் பட்டதாரிகளின் முதல் தொகுதி பட்டமளிப்பு விழாவைக் கொண்டாடின.
இந்த திட்டம் அமைச்சகத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு குழுவின் முன்மாதிரிகளை உருவாக்குவதன் மூலம் இந்திய மின்னணு பொம்மைகள் துறையின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு முன்முயற்சியாகும், மேலும் இது இளம் பொறியாளர்களை சித்தப்படுத்துகிறது.
அமைச்சகத்தின் முன்முயற்சியின் கீழ், வடகிழக்கு பிராந்தியம் மற்றும் SC/ST பின்னணியில் இருந்து இந்தியா முழுவதிலும் இருந்து இளம் பொறியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு வருடத்திற்கு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
நிகழ்வின் போது, அமைச்சகத்தின் செயலாளர் , மின்னணு பொம்மை ஹேக்கத்தானை அறிவித்தார். நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்த அவர், “இந்தியாவில் மின்னணு பொம்மைகளின் சந்தை வளர்ந்து வருகிறது, மேலும் இந்திய பொம்மை தொழில் சூழலை உருவாக்க, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் முக்கியப் பங்காற்ற முடியும். அதற்கான கட்டுமானத் தொகுதிகள் உருவாக்கப்படுவதையும், அடுத்த தலைமுறை பொறியாளர்கள் அதை நோக்கிச் செயல்படுவதையும் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த திட்டத்தை அதிக அளவில் மாணவர்களுக்கு வழங்குவதற்கும், பொம்மைத் தொழில்களின் ஒட்டுமொத்த ஊக்குவிப்பிலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும் பெரிய அளவில் முறைப்படுத்தலாம். எஸ்டிபிஐ/எம்எஸ்ஹெச் மற்றும் எலக்ட்ரானிக் பொம்மைகளை மையமாகக் கொண்ட பிற நிறுவனங்களின் உதவியுடன் நாம், பட்டம் பெறும் மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய உதவலாம்” என்றார்.
நவம்பர் 23, 2024 அன்று நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழாவில், அமைச்சகத்தின் செயலாளர் திரு எஸ். கிருஷ்ணன், கூடுதல் செயலாளர் திரு புவனேஷ் குமார், குழு ஒருங்கிணைப்பாளர் திருமதி. சுனிதா வர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
*****
PKV/KV
(Release ID: 2076417)
Visitor Counter : 14