எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

லே-வில் தேசிய அனல் மின் கழகத்தின் பசுமை ஹைட்ரஜன் பேருந்துகள்- மத்திய அமைச்சர் திரு மனோகர் லால் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்

Posted On: 23 NOV 2024 4:23PM by PIB Chennai

 

மத்திய மின்சாரம், வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு மனோகர் லால் இன்று (23.11.2024) லேவில் மின் துறை, லே நிர்வாகம், தேசிய அனல்மின் கழகமான என்டிபிசி ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் என்டிபிசி-யின் பசுமை ஹைட்ரஜன் பேருந்துகளை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

கொடியேற்றப்பட்ட பிறகு, மத்திய அமைச்சர் ஹைட்ரஜன் நிரப்பு நிலையத்திலிருந்து லே விமான நிலையத்திற்கு 2 ஹைட்ரஜன் பேருந்துகளில் ஒன்றில் 12 கிலோ மீட்டர் பயணம் செய்தார்.

 பல்வேறு முனைகளில் ஹைட்ரஜன் தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதன் மூலம் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு, கார்பன் நீக்க முயற்சிகளுக்கு தனித்துவமான பங்களிப்பை வழங்கியதற்காக என்டிபிசி-க்கு மத்திய அமைச்சர் பாராட்டுத் தெரிவித்தார்.

லேவில் பசுமை ஹைட்ரஜன் போக்குவரத்துத் திட்டத்தில் 1.7 மெகாவாட் சூரிய ஆலை, நாளொன்றுக்கு 80 கிலோ திறன் கொண்ட பசுமை ஹைட்ரஜன் நிரப்பும் நிலையம், நகரங்களுக்கு இடையேயான 5 ஹைட்ரஜன் பேருந்துகள் ஆகியவை உள்ளனபல்வேறு பசுமை ஹைட்ரஜன் தொழில்நுட்பங்களுடன் இந்தியா முழுவதும் அதிக ஹைட்ரஜன் போக்குவரத்துத் திட்டங்களை என்டிபிசி அமைத்து வருகிறது.

*****

PLM/KV

 

 

 

 


(Release ID: 2076340) Visitor Counter : 33


Read this release in: English , Urdu , Hindi , Punjabi