ஆயுஷ்
'தேசிய உடல் தோஷ சோதனை இயக்கம்' ஒவ்வொரு வீட்டிற்கும் ஆயுர்வேதத்தை நெருக்கமாகக் கொண்டுவருகிறது, மக்கள் தங்கள் தனித்துவமான உடல் கட்டமைப்பின் இயல்பைப் புரிந்துகொள்ளவும், தனிப்பயனாக்கப்பட்ட, தடுப்பு சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றவும் அதிகாரம் அளிக்கிறது: மத்திய இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு பிரதாப்ராவ் ஜாதவ்
प्रविष्टि तिथि:
22 NOV 2024 4:55PM by PIB Chennai
ஆயுஷ் அமைச்சகம் இன்று தேசிய ஊடக மையத்தில் செய்தியாளர் சந்திப்பை நடத்தியது. மத்திய இணை அமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ், 9-வது ஆயுர்வேத தின கொண்டாட்டங்களுடன் இணைந்து, 2024 அக்டோபர் 29 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டதிலிருந்து, 'தேசிய உடல் தோஷ சோதனை இயக்கம்' திட்டத்தின் கீழ் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் குறித்து ஊடகங்களுக்கு விளக்கினார். ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் திரு வைத்யா ராஜேஷ் கோடேச்சா மற்றும் இந்திய மருத்துவ முறைக்கான தேசிய ஆணையத்தின் (என்.சி.ஐ.எஸ்.எம்) தலைவர் திரு வைத்யா ஜெயந்த் தியோபுஜாரி ஆகியோரும் இந்த மாநாட்டின் போது மத்திய ஆயுஷ் அமைச்சருடன் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2076016
***
TS/MM/AG/DL
(रिलीज़ आईडी: 2076070)
आगंतुक पटल : 114