தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, அக்கினேனி நாகேஸ்வர ராவுக்கு (ஏ.என்.ஆர்) மரியாதை செலுத்துகிறது
இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் 55-வது பதிப்பு (ஐ.எஃப்.எஃப்.ஐ) இந்திய சினிமாவின் முன்னோடியான அக்கினேனி நாகேஸ்வர ராவுக்கு (ஏ.என்.ஆர்) "நூற்றாண்டு சிறப்பு ஏ.என்.ஆர்: அக்கினேனி நாகேஸ்வர ராவின் வாழ்க்கை மற்றும் படைப்புகளைக் கொண்டாடுதல்" என்ற சிறப்பு அமர்வின் மூலம், மரியாதை செலுத்தியது. பனாஜியில் உள்ள கலா அகாடமியில் நடைபெற்ற இந்த அமர்வில், அவரது மகன் நாகார்ஜுனா அக்கினேனி புகழ்பெற்ற நடிகை குஷ்பு சுந்தருடன் உரையாடினார்.
ஏ.என்.ஆரின் மரபு மற்றும் தெலுங்கு சினிமாவை வடிவமைப்பதில் அவரது முக்கியப் பங்களிப்பை விளக்கும் வீடியோவுடன் இந்த நிகழ்வு தொடங்கியது. நாகார்ஜுனா தனது தந்தையின் இதயப்பூர்வமான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதுடன், தொழில்துறைக்கான தனது பார்வையையும் எடுத்துரைத்தார்.
"தெலுங்கு சினிமாவை முக்கியமான சக்தியாக மாற்ற வேண்டும் என்பது எனது தந்தையின் குறிக்கோளாக இருந்தது" என்று நாகார்ஜுனா கூறினார். அவர் நிறுவிய அன்னபூர்ணா ஸ்டுடியோஸ், இன்றும் தொழில்துறையின் அஸ்திவாரமாக உள்ளது. தெலுங்கு சினிமாவை பான்-இந்திய சினிமாவாக
மாற்றுவதில் ஏ.என்.ஆரின் தொலைநோக்குப் பார்வையையும் அவர் எடுத்துரைத்தார். "மொழி ஒரு தடையாக இருக்கக்கூடாது என்ற அவரது நம்பிக்கை, அவரது காலத்திற்கு முன்பே இருந்தது" என்றார்.
ஏ.என்.ஆரின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு குறித்து, குஷ்பு சுந்தர், நாகார்ஜுனாவுடன் விவாதித்தார். அன்னபூர்ணா திரைப்படக் கல்லூரி போன்ற முயற்சிகள் மூலம், ஏ.என்.ஆரின் தொலைநோக்கை பாதுகாத்ததற்காக நாகார்ஜுனா தனது குடும்பத்தைப் பாராட்டினார். மேலும் "இது அடுத்த தலைமுறை திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு ஒரு தளத்தை உருவாக்குவது பற்றியது" என்றும் கூறினார்.
கேள்வி பதில் அமர்வில், ஏ.என்.ஆர் பற்றிய வாழ்க்கை வரலாறு குறித்து கேட்டபோது, நாகார்ஜுனா ஒரு ஆவணப்படத்திற்கான தனது திட்டங்களை வெளிப்படுத்தினார். "ஒரு ஆவணப்படம் அவருடைய வாழ்க்கை மற்றும் பார்வையின் சாரத்தை சிறப்பாக படம்பிடிக்கும்," என்று அவர் விளக்கினார்.
நாகார்ஜுனா மற்றும் குஷ்பு ஆகியோர் சினிமாவுக்கு ஏ.என்.ஆரின் காலத்தால் அழியாத பங்களிப்புகளைக் கொண்டாடினர். பார்வையாளர்கள் ஒரு சினிமா புராணக்கதையின் நீடித்த பாரம்பரியத்தால் ஈர்க்கப்பட்டனர்.
***
TS/MM/AG/DL
(Release ID: 2076060)
Visitor Counter : 25