பாதுகாப்பு அமைச்சகம்
மேற்கு கடற்பகுதியில் சென்றுகொண்டிருந்த கடற்படை நீர்மூழ்கிக் கப்பலுடன் மீன்பிடி படகு மோதியது
प्रविष्टि तिथि:
22 NOV 2024 8:00AM by PIB Chennai
கோவாவுக்கு வடமேற்கே 70 கடல் மைல் தொலைவில் 13 பேர் கொண்ட இந்திய மீன்பிடி கப்பல் நவம்பர் 21 அன்று இந்திய கடற்படை நீர்மூழ்கிக் கப்பலுடன் மோதியது. இந்திய கடற்படை உடனடியாக 6 கப்பல்கள் மற்றும் விமானங்களுடன் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொண்டது. இதுவரை 11 பணியாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
மீதமுள்ள இரண்டு பேரைத் தேடும் பணி மற்றும் மீட்பு முயற்சிகள் மும்பை கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துடன் (எம்.ஆர்.சி.சி) ஒருங்கிணைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேடுதல் முயற்சிகளை அதிகரிக்க கடலோரக் காவல்படையிடமிருந்து கூடுதல் படகுகள் இப்பகுதிக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
***
(Release ID: 2075763)
TS/PKV/RR/KR
(रिलीज़ आईडी: 2075934)
आगंतुक पटल : 76