கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
சராய்டியோ மைதாமின் உலகப் பாரம்பரிய தள அந்தஸ்து அசாம் மற்றும் அஹோம் பாரம்பரியத்திற்கு உலகளாவிய பயணிகளை ஈர்க்கிறது: திரு சர்பானந்த சோனாவால்
Posted On:
21 NOV 2024 6:14PM by PIB Chennai
யுனெஸ்கோ அமைப்பால் உலகப் பாரம்பரிய தளமாக அங்கீகரிக்கப்பட்ட பின்னர் மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப்பாதைகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் சராய்டியோ மைதாமுக்குப் பயணம் செய்தார்.
இங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர், "யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய தளமாக அங்கீகரிக்கப்பட்ட சராய்டியோ மைதாம், அஹோம் சகாப்தத்தின் கட்டிடக்கலை திறமைக்கு ஒரு குறிப்பிடத்தக்க சான்றாக நிற்கிறது. இது மதிப்பிற்குரிய மூதாதையர்களின் பாரம்பரியத்தை உள்ளடக்கியது. பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு முயற்சிகளால் இந்த வரலாற்று சாதனை சாத்தியமானது. இந்த பாரம்பரியத்திற்கு உலகளாவிய அங்கீகாரத்தை கொண்டு வந்ததற்காக அசாம் மக்கள் திரு மோடிக்கு ஆழ்ந்த நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள். சராய்டியோ மைதாமின் வளமான பாரம்பரியம் தொடர்ந்து பிரகாசிக்கட்டும், சிறந்த அஹோம் ஆட்சியாளர்களின் காலம் கடந்த கொள்கைகளுடன் நம்மை ஊக்குவிக்கட்டும். வளமான மற்றும் கலாச்சார ரீதியாக துடிப்பான மாநிலத்தை உருவாக்குவதில் நமது பாதையை வழிநடத்தட்டும்" என்றார்.
"சிறந்த அஹோம் மூதாதையர்களின் துணிச்சல், வீரம் மற்றும் வெல்ல முடியாத தைரியத்தின் மரபைச் சுமக்கும் சராய்டியோவின் மைதாம்கள், அசாமிய தேசத்தின் சுயமரியாதை மற்றும் பெருமையின் நீடித்த சின்னங்களாக நிற்கின்றன" என்று திரு சோனாவால் குறிப்பிட்டார். "இதற்கு உலகளாவிய கௌரவம் கிடைப்பதற்கு முக்கிய பங்காற்றியதற்காக அசாம் மக்கள் சார்பாக பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அஹோம் காலத்தின் தனித்துவமான கலாச்சார கட்டிடக்கலை மற்றும் கலாச்சார மரபுகளைக் காண சராய்டியோ மைதாமுக்கு வருகை தருமாறு உலகப் பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை அழைக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்த விரும்புகிறேன். அஹோம் மன்னர்கள் தங்கள் 600 ஆண்டுகால நல்லாட்சியின் மூலம் வெற்றிகரமாக உருவாக்கிய வண்ணமயமான அசாமிய சமூகத்தில் மிகப்பெரிய சமூக கலாச்சார கட்டமைப்பை சுற்றுலாப் பயணிகள் அனுபவிப்பார்கள்" என்று அவர் கூறினார்.
2020 ஆம் ஆண்டில், சராய்டியோவில் மாநில அரசு ஏற்பாடு செய்த "மீ-டாம்-மீ-ஃபை" கொண்டாட்டங்களில் திரு சோனாவால் பங்கேற்றார், அங்கு அவர் தளத்தின் பாரம்பரியத்தை தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவத்திற்கு உயர்த்துமாறு பிரதமர்திரு நரேந்திர மோடியை வலியுறுத்தினார். திரு சோனோவால் அறிவுறுத்தலின் பேரில், அசாம் அரசு சராய்டியோவின் யுனெஸ்கோ நியமனத்திற்கு அழுத்தம் கொடுக்க சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் பல ஆய்வுக் கூட்டங்களை நடத்தியது.
திரு சோனோவால் மத்திய அமைச்சராக இருந்த காலத்தில், சராய்டியோவின் அங்கீகாரத்திற்காக தொடர்ந்து வாதிட்டார். அவர் இதற்கான ஆவணத்தை பிரதமர் அலுவலகத்தில் சமர்ப்பித்தார்; யுனெஸ்கோவுக்கு அதை சமர்ப்பிப்பதையும் உறுதி செய்தார்.
"அசாமின் பிரமிடுகள்" என்று குறிப்பிடப்படும் சராய்டியோ மைதாம்கள், 600 ஆண்டுகளுக்கும் மேலாக அசாமை ஆண்ட அஹோம் வம்சத்தின் வளமான கலாச்சார மற்றும் வரலாற்று பாரம்பரியத்தை அடையாளப்படுத்துகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2075583
***
SMB/AG/DL
(Release ID: 2075632)
Visitor Counter : 25