தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
வடகிழக்கு முதல் லடாக் வரை: IFFI 2024-ல் கதை அம்சம் அல்லாத படங்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றன
கோவாவில் நடைபெற்று வரும் 55-வது சர்வதேச திரைப்பட விழாவின் போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் கூட்டத்தில் பேசிய இந்தியன் பனோரமா கதை அம்சம் அல்லாத திரைப்படங்கள் நடுவர் குழுவின் தலைவர் திரு சுப்பையா நல்லமுத்து, "நாடு முழுவதிலும் இருந்து 250-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் போட்டிக்கு வந்துள்ளன. "கல்லூரி மாணவர்கள், இளம் படைப்பாளிகள் உட்பட பல்வேறு தரப்பு திரைப்பட தயாரிப்பாளர்கள் தங்கள் பதிவுகளை சமர்ப்பித்துள்ளனர் என்றார். உள்ளடக்கம் மற்றும் கதை சொல்லல் ஆகியவை முக்கிய தேர்வு அளவுகோலாக இருந்தன என்றும் அவர் கூறினார்.
நடுவர் குழு உறுப்பினரான திருமதி ஷாலினி ஷா, லடாக்கி திரைப்படம் தொடக்க படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து உற்சாகத்தை வெளிப்படுத்தினார். இது "ஒரு அரிய மற்றும் பெருமைக்குரிய சந்தர்ப்பம்" என்று கூறினார். ஹரியான்வி சினிமாவின் சிறப்பையும் அவர் எடுத்துரைத்தார்.
கதை அல்லாத திரைப்படங்கள் மீது கவனத்தை ஈர்க்க வேண்டிய அவசரத் தேவையை நடுவர் குழு வலியுறுத்தியது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2075559
***
TS/MM/RS/DL
(Release ID: 2075607)
Visitor Counter : 16