குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

43-வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சி 2024-ல் எம்எஸ்எம்இ அரங்கை ஷோபா கரந்தலஜே பார்வையிட்டார்

Posted On: 20 NOV 2024 4:56PM by PIB Chennai

புதுதில்லியில் நடைபெறும் 43-வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியில் எம்எஸ்எம்இ அரங்கத்தை, மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை இணையமைச்சர் ஷோபா கரந்தலஜே இன்று பார்வையிட்டார். எம்எஸ்எம்இ அமைச்சகத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளும், அமைச்சகத்தின் கீழ் உள்ள மற்ற நிறுவனங்களின் அதிகாரிகளும் உடனிருந்தனர்.

இந்த அரங்கின் மையப்பொருள் பசுமை, எம்எஸ்எம்இ-க்கள் என்பதாகும். மேலும் இந்த அரங்கு அமைச்சகத்தின் முக்கிய திட்டமான பிரதரின் விஸ்வகர்மா திட்டத்தை எடுத்துரைப்பதாகவும் அமைந்திருந்தது. இத்திட்டம் 18 தொழில்களில் கைவினைஞர்கள் மற்றும் கைத்திறன் தொழிலாளர்களுக்கு முழுமையான ஆதரவை வழங்குகிறது.

எம்எஸ்எம்இ அரங்கில் 29 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களைச்  சேர்ந்த 200 கைவினைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.  இதில் ஜவுளி, கைத்தறி, கைவினைப் பொருட்கள், பின்னல் ஆடைகள்,  தோல் காலணிகள்,  பொம்மைகள், மூங்கில் பொருட்கள், பிரம்பால் செய்யப்பட்ட பொருட்கள், மணிக்கற்கள், ஆபரணங்கள், செராமிக் பொருட்கள், மண்பாண்டங்கள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் கண்காட்சி  குறு, சிறு  தொழில் நிறுவனங்களுக்கு குறிப்பாக பெண்கள்  மற்றும் எஸ்சி /எஸ்டி பிரிவினருக்கு சொந்தமான தொழில் நிறுவனங்களுக்கும்  முன்னேற விரும்பும் மாவட்டங்களைச் சேர்ந்த நிறுவனங்களுக்கும் வாய்ப்பு வழங்கியுள்ளது.

பிரதமரின் விஸ்வகர்மா திட்டப் பயனாளிகளுடன்  கலந்துரையாடிய ஷோபா கரந்தலஜே, அவர்களின்  உற்பத்திப் பொருட்கள் குறித்து  பாராட்டுத் தெரிவித்தார். இந்தத் திட்டம் பற்றிய வீதி நாடகமும், நடத்தப்பட்டது. இந்தக் கண்காட்சியில் 85 சதவீதத்திற்கும் அதிகமான பங்கேற்பாளர்கள் முதல் முறை பங்கேற்பது மகிழ்ச்சி அளிப்பதாக அமைச்சர் கூறினார்.

****

AD/SMB/KPG/DL


(Release ID: 2075231) Visitor Counter : 12


Read this release in: English , Urdu , Hindi , Kannada