பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா-ஜப்பான் கூட்டுப்படை அதிகாரிகளின் 2-வது பேச்சுவார்த்தை புதுதில்லியில் நிறைவடைந்தது

प्रविष्टि तिथि: 20 NOV 2024 4:48PM by PIB Chennai

ஒருங்கிணைந்த பாதுகாப்பு அதிகாரிகள், ஜப்பான் பாதுகாப்புப் படை அதிகாரிகள் இடையேயான  இந்தியா-ஜப்பான் 2-வது  கூட்டுப்படை பேச்சுவார்த்தை 2024 நவம்பர் 20 அன்று புதுதில்லியில் நிறைவடைந்தது. நவீன போர்முறையின் வளர்ந்து வரும் இயக்கவியலை அங்கீகரிக்கும் வகையில், இரு நாடுகளும் தங்களது பாதுகாப்பு கூட்டாண்மையின் முக்கிய கூறுகளாக விண்வெளி மற்றும் இணையதள தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் பகிர்ந்து கொள்ளப்பட்ட உறுதிப்பாட்டை வெளிப்படுத்திக் கொண்டன.

ஒருங்கிணைந்த பாதுகாப்புப்படை அதிகாரிகள்  துணைத்தலைவர் ஏர் வைஸ் மார்ஷல் பிரசாந்த் மோகன்,  ஜப்பான் பாதுகாப்புப் படை அதிகாரிகள் பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் கொள்கைத் துறையின் தலைமை இயக்குநர் ஜெனரல் மேஜர் ஜெனரல் மினாமிகாவா நொபுடகா ஆகியோர் இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கினர். தற்போதுள்ள பாதுகாப்பு ஈடுபாடுகளை வலுப்படுத்துவது மற்றும் தற்போதுள்ள இருதரப்பு பாதுகாப்பு வழிமுறைகளின் கீழ் ஒத்துழைப்புக்கான புதிய வழிகளை ஆராய்வது குறித்து அதிகாரிகள் ஆரோக்கியமான விவாதங்களில் ஈடுபட்டனர். பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வது, பகிர்ந்து கொள்ளப்பட்ட நலன்களைப் பாதுகாத்தல், இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியை நிலைநிறுத்துதல் ஆகியவற்றில் இந்தியா மற்றும் ஜப்பானின் கூட்டாண்மையின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை இருதரப்பும் ஒப்புக் கொண்டன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2075091

***

TS/IR/AG/DL


(रिलीज़ आईडी: 2075180) आगंतुक पटल : 73
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi