பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

"வாழ்க்கையை எளிதாக்குதல்: அடிமட்டத்தில் சேவை வழங்கலை மேம்படுத்துதல்" குறித்த பஞ்சாயத்து மாநாட்டை மத்திய இணையமைச்சர் பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகேல் தொடங்கி வைத்தார்

Posted On: 19 NOV 2024 6:39PM by PIB Chennai

"வாழ்க்கையை எளிதாக்குதல்: அடிமட்டத்தில் சேவை வழங்கலை மேம்படுத்துதல்" குறித்த பஞ்சாயத்து மாநாட்டை ஆக்ராவில் 19 நவம்பர் 2024 அன்று, உத்தரப்பிரதேச அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு ஓம் பிரகாஷ் ராஜ்பர், செயலாளர் திரு விவேக் பரத்வாஜ், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் செயலாளர் திரு விவேக் பரத்வாஜ் ஆகியோர் முன்னிலையில், மத்திய பஞ்சாயத்து ராஜ் இணைமைச்சர் பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகேல் தொடங்கி வைத்தார்.

நான்கு பஞ்சாயத்து மாநாடுகளின் வரிசையில் இரண்டாவதாக, ஆக்ரா பஞ்சாயத்து மாநாடு, ஆக்ரா மாவட்ட பஞ்சாயத்து தலைவர் திருமதி மஞ்சு பதாரியா, உத்தரப்பிரதேச மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் திருமதி பபிதா சவுகான் மற்றும் பிற மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மூன்றடுக்கு பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்துகொண்டனர். மாறுபட்ட புவியியல் அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த பஞ்சாயத்து மாநாடு, அசாம், அருணாச்சல பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், நாகாலாந்து, உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட் ஏழு மாநிலங்களில் இருந்து பங்கேற்பாளர்களை ஒன்றிணைத்தது. இந்த உத்திசார்ந்த பிரதிநிதித்துவம் இந்தியாவின் பன்முக கிராமப்புற நிர்வாக நிலப்பரப்பை பிரதிபலிக்கும் ஒரு விரிவான உரையாடலை உறுதி செய்தது.

நிகழ்ச்சியில் பேசிய பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகேல், அடிமட்ட நிர்வாகத்தின் மாற்றத்தை ஏற்படுத்தும் திறன் குறித்து வலியுறுத்தினார்: "நமது பஞ்சாயத்துகள் வெறும் நிர்வாக அலகுகள் மட்டுமல்ல, மாற்றத்திற்கான கிரியா ஊக்கிகள். டிஜிட்டல் அதிகாரமளித்தல் மற்றும் புதுமையான சேவை வழங்கல் மூலம், கிராமப்புற வளர்ச்சியை ஒரு உள்ளடக்கிய பயணமாக நாங்கள் கருதுகிறோம்" என்றார். பஞ்சாயத்துகளில் பெண்களின் தலைமையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் 'பிரதான்பதி' (வாழ்க்கைத் துணையின் குறுக்கீடு) நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவர பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகேல் அழைப்பு விடுத்தார்.

மக்களுக்கு வானிலை முன்னறிவிப்புகளை வழங்க இ-கிராம ஸ்வராஜ் போர்ட்டல் மற்றும் எனது பஞ்சாயத்து இணையதளத்தை பயன்படுத்துமாறு பேராசிரியர் பாகேல் பஞ்சாயத்துகளை வலியுறுத்தினார். கிராமப்புற புலம்பெயர்தல் குறித்த கவலைகளை நிவர்த்தி செய்த மத்திய அமைச்சர், மேம்பட்ட சேவை வழங்கல் மற்றும் வாழ்க்கையை எளிதாக்குதல் ஆகியவை கிராமங்களிலிருந்து வெளியேறுவதைத் தடுக்கும் என்று வலியுறுத்தினார். "ஸ்மார்ட் கிராமங்கள் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும்" என்று குறிப்பிட்ட அவர், பஞ்சாயத்துகளை சொந்த ஆதார வருவாயை (OSR) உருவாக்கவும், மாநிலங்களில் உள்ள சிறந்த நடைமுறைகளிலிருந்து கற்றுக்கொள்ளவும் ஊக்குவித்தார். வசதிகளை மேம்படுத்தவும், பஞ்சாயத்து வருமானத்தை அதிகரிக்கவும் கிராமங்களில் பல்நோக்கு சமுதாயக் கூடங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று அவர் வாதிட்டார்.

உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு, பேராசிரியர் பாகேல், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையைப் பாராட்டினார். தூய்மை இந்தியா இயக்கம் எவ்வாறு சுகாதாரம் மற்றும் துப்புரவு நிர்வாகத்தில் பெண்களின் கண்ணியத்திற்கு முன்னுரிமை அளித்துள்ளது என்பதைக் குறிப்பிட்டார். அரசின் திட்டங்கள் பற்றிய தகவல்கள், குறிப்பாக ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான சுகாதார வசதிகள் குறித்த தகவல்கள் ஒவ்வொரு குடிமகனையும் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று பஞ்சாயத்து பிரதிநிதிகளை அவர் வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2074725

***

MM/AG/DL


(Release ID: 2074764) Visitor Counter : 18


Read this release in: English , Urdu , Hindi