பாதுகாப்பு அமைச்சகம்
இந்திய கடலோர பாதுகாப்பு அமைப்புகளின் தயார்நிலையை மறுஆய்வு செய்ய 136-வது கடல் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
Posted On:
19 NOV 2024 5:33PM by PIB Chennai
இந்திய கடலோர காவல்படை 19, நவம்பர் 2024 அன்று தெலங்கானாவின் ஐதராபாத்தில் 136-வது கடல் பாதுகாப்பு ஒருங்கிணைப்புக் குழு (OSCC) கூட்டத்தை நடத்தியது. இக்கூட்டம் இந்தியாவின் கடலோர பாதுகாப்பு அமைப்புகளின் ஆயத்தநிலை மற்றும் செயல்திறனை மதிப்பாய்வு செய்தது. கடலோர காவல்படை தலைமை இயக்குநர் பரமேஷ் சிவமணி பேசுகையில், எரிசக்தி பாதுகாப்பின் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டியதுடன், கடல் கடந்த சொத்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஓ.எஸ்.சி.சி கூட்டத்தில் இந்திய கடலோர காவல்படை, கடற்படை, விமானப்படை, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம், ஹைட்ரோகார்பன் தலைமை இயக்குநரகம், கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் உள்ளிட்ட, சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கடல் பாதுகாப்பு ஏற்பாடுகள் திறம்பட செயல்படுவதை உறுதி செய்வதற்காக 1978-ம் ஆண்டில் இந்த குழு அமைக்கப்பட்டது. அப்போதிலிருந்து, கொள்கைகளை வகுப்பதிலும், தொடர்புடைய பிரச்சினைகளுக்கு வழிகாட்டுதல் மற்றும் தீர்வுகளை வழங்குவதிலும் இது திறம்பட பங்களித்துள்ளது.
***
TS/MM/AG/DL
(Release ID: 2074754)
Visitor Counter : 15