தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
செப்டம்பர் மாதத்தில் இஎஸ்ஐ திட்டத்தின் கீழ் 20.58 லட்சம் புதிய தொழிலாளர்கள் சேர்ந்துள்ளனர்
Posted On:
19 NOV 2024 3:19PM by PIB Chennai
தொழிலாளர் அரசு ஈட்டுறுதி கழகத்தின் (இஎஸ்ஐசி) தற்காலிக ஊதிய தரவுகள், 2024 ஆனது கடந்த செப்டம்பர் மாதத்தில் 20.58 லட்சம் புதிய ஊழியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுகிறது.
2024 செப்டம்பர் மாதத்தில் 23,043 புதிய நிறுவனங்கள் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டத்தின் சமூகப் பாதுகாப்பு வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன் மூலம் அதிகமான தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், 2023 செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இது 9% வளர்ச்சியைக் காட்டுகிறது.
ஆண்டுக்கு ஆண்டு ஒப்பீடு
விவரம் செப்டம்பர் 2023 செப்டம்பர் 2024 வளர்ச்சி
பதிவு செய்த புதிய ஊழியர்களின் எண்ணிக்கை 18.88 லட்சம் 20.58 லட்சம் 1.70 லட்சம்
தரவுகளின் மூலம், செப்டம்பர் மாதத்தில் சேர்க்கப்பட்ட மொத்த 20.58 லட்சம் ஊழியர்களில், 10.05 லட்சம் ஊழியர்கள், அதாவது மொத்த பதிவுகளில் சுமார் 48.83% பேர் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது கவனிக்கத்தக்கது.
மேலும், ஊதியத் தரவுகளின் பாலின வாரியான பகுப்பாய்வு, 2024 செப்டம்பரில் பெண் உறுப்பினர்களின் நிகர சேர்க்கை 3.91 லட்சமாக இருப்பதைக் குறிக்கிறது. இது தவிர, 2024 செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 64 திருநங்கை ஊழியர்கள் இஎஸ்ஐ திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளனர், இது சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் அதன் பலன்களை வழங்குவதற்கான இஎஸ்ஐசி-யின் உறுதிப்பாட்டை காண்பிக்கிறது.
தரவு உருவாக்கம் ஒரு தொடர்ச்சியான பயிற்சியாக இருப்பதால் ஊதிய தரவு தற்காலிகமானதாக கருதப்படுகிறது.
***
(Release ID: 2074591)
TS/PKV/RR/KR
(Release ID: 2074640)
Visitor Counter : 30