வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் சமத்துவம், சமநிலை மற்றும் நியாயமான வர்த்தகத்தை இந்தியா எதிர்பார்க்கிறது: அமைச்சர் பியூஷ் கோயல்
प्रविष्टि तिथि:
19 NOV 2024 3:05PM by PIB Chennai
மும்பையில் இன்று நடைபெற்ற 27-வது சிஐடிஐசி சிஎல்எஸ்ஏ இந்தியா மன்றத்தில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் சிறப்புரையாற்றினார். அப்போது, தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தும்போது, இந்தியா சமத்துவம், சமநிலை மற்றும் நியாயமான வர்த்தகத்தை எதிர்பார்க்கிறது என்று அவர் தெரிவித்தார். வெளிப்படையான, மற்றும் அரசின் பொருளாதார அமைப்புகள் ஒத்துப்போகும் நாடுகளுடன், இந்தியா அந்நிய நேரடி முதலீட்டு ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் என்று அவர் உறுதிபடக் கூறினார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தீர்க்கமான தலைமை, ஜனநாயகம், மக்கள் தொகை அனுகூலம் மற்றும் தேவை ஆகிய நான்கு அம்சங்களை இந்தியா பயன்படுத்துவதை உறுதி செய்வதுடன், பெரிய விருப்பங்களை அடைவதற்கு இந்தியர்களுக்கு அதிகாரம் அளிப்பதோடு, கடந்த பத்தாண்டுகளாக மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதே அரசின் முன்னுரிமையாக இருந்து வருகிறது என்று திரு கோயல் வலியுறுத்தினார். நாட்டில் தொடர்ந்து முதலீடு செய்யுமாறு மாநாட்டு பங்கேற்பாளர்களை வலியுறுத்திய அவர், 2047 ஆண்டில் வளர்ச்சியடைந்த இந்தியா திட்டத்தை நோக்கி நாடு முன்னேறும்போது, இந்தியா வழங்கும் வாய்ப்புகள் உலகிற்கு சிறந்த வர்த்தக இடமாக அமைகிறது என்று குறிப்பிட்டார்.
நாட்டில் திறன் மேம்பாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 2024 பட்ஜெட்டில் 30 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஐந்து திட்டங்களை அறிவித்துள்ளது என்றார். வரும் ஆண்டுகளில், இளைஞர்கள் தங்கள் விருப்பப்படி முறையான கல்வியைத் தேர்ந்தெடுத்து விரும்பும் தொழிலுக்கு செல்ல அனுமதிப்பதில் அரசின் கவனம் இருக்கும். திறன் மேம்பாட்டிற்காக பெருநிறுவன சமூக பொறுப்புடைமை நிதி செலவழிக்கப்படும்போது அது வரும் ஆண்டுகளில் முன்னேற்றத்தை அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.
***
(Release ID: 2074586)
TS/MM/AG/KR
(रिलीज़ आईडी: 2074639)
आगंतुक पटल : 63