கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
தெற்காசியாவின் மிகப்பெரிய கடல்சார் சிந்தனை தலைமைத்துவ உச்சி மாநாடு தொடங்கியது
Posted On:
18 NOV 2024 7:25PM by PIB Chennai
தெற்காசியாவின் மிகப்பெரிய கடல்சார் சிந்தனை தலைமைத்துவ உச்சிமாநாடான சாகர்மந்தன் – மாபெரும் பெருங்கடல்கள் உரையாடல் இன்று தொடங்கியது. தொடக்க அமர்வில் மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனாவால், கிரீஸின் கடல்சார் விவகாரங்கள் மற்றும் தீவுக் கொள்கை அமைச்சர் திரு கிறிஸ்டோஸ் ஸ்டைலியானைட்ஸ, மாலத்தீவின் மீன்வளம் மற்றும் கடல் வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் அம்ஜத் அகமது, அர்ஜென்டினாவின் ரியோ நீக்ரோ மாகாணத்திற்கான தேசிய பிரதிநிதி திருமதி மரியா லோரெனா வில்லாவெர்டே உட்பட 61 நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் கடல்சார் துறையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் உலகளாவிய கொள்கை வகுப்பாளர்கள், கடல்சார் வல்லுநர்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் அறிஞர்களை ஒன்றிணைத்து நிலையான மற்றும் புதுமையான கடல்சார் நடைமுறைகளை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
தொடக்க அமர்வில் பேசிய மத்திய அமைச்சர் திரு சர்பானந்தா சோனாவால், துறைமுக திறனை மேம்படுத்துதல், கப்பல் போக்குவரத்து, உள்நாட்டு நீர்வழிகள் அமைத்தல் ஆகியவற்றில் ரூ .80 லட்சம் கோடி முதலீட்டுடன் இந்தியாவின் கடல்சார் துறையில் புரட்சியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று தெரிவித்தார். கேரளாவில் விழிஞ்சம் சர்வதேச துறைமுகம், மகாராஷ்டிராவில் வாதவனில் புதிய மெகா துறைமுகங்கள் மற்றும் நிக்கோபாரில் கலதியா விரிகுடா ஆகியவை முக்கிய திட்டங்களில் அடங்கும். 2047-ம் ஆண்டுக்குள், இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் மற்றும் சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடம் போன்ற முயற்சிகள் மூலம் வர்த்தக பாதைகளை மேம்படுத்தி, ஆண்டுக்கு 10,000 மில்லியன் மெட்ரிக் டன் துறைமுகங்களை கையாளும் திறனை இந்தியா இலக்காகக் கொண்டுள்ளது என்று திரு சர்பானந்த சோனாவால் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2074383
***
IR/RS/DL
(Release ID: 2074403)