ஜவுளித்துறை அமைச்சகம்
பல்வேறு கலப்புகளுடன் புதிய ஜவுளிப் பொருட்களை உற்பத்தி செய்யுமாறு பானிபட்டின் ஜவுளித் தொழில் துறையினரை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங் வலியுறுத்தினார்
Posted On:
18 NOV 2024 5:46PM by PIB Chennai
மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங், (2024 நவம்பர் 18) இன்று ஹரியானா மாநிலம் பானிபட் நகரில் ஜவுளி உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்களை சந்தித்தார். 150-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். ஜவுளித் துறையில், குறிப்பாக நாட்டின் ஜவுளி மற்றும் கைத்தறிக்கான முக்கிய மையமான பானிபட்டில், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், உற்பத்தித் தொழில்களை பாதிக்கும் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்த கூட்டம் நடைபெற்றது.
தொழில் துறையினரிடையே உரையாற்றிய ஜவுளித்துறை அமைச்சர், மூங்கிலுடன் சணல், செயற்கை இழைகளால் மறுசுழற்சி செய்யப்பட்ட பருத்தி, தரை விரிப்பு மற்றும் கம்பளப் பொருட்கள் ஆகியவற்றில் பல்வேறு கலப்புகளுடன் புதிய தயாரிப்புகளை உற்பத்தி செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து குறிப்பிட்டார்.
மத்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் கைத்தறி மேம்பாட்டு ஆணையர் அலுவலகத்தின் கீழ் செயல்படும் கைத்தறி ஏற்றுமதி மேம்பாட்டு குழுமம், பானிபட் ஏற்றுமதியாளர்கள் சங்கத்துடன் இணைந்து ஜவுளித்துறை அமைச்சருக்கும், தொழில்துறைக்கும் இடையேயான கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
தொழிற்சாலைகளை பார்வையிட்ட ஜவுளித்துறை அமைச்சர், தொழிற்சாலைகளின் 100% எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்ய பசுமை சக்தியை பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். பானிபட் கம்பளம் மற்றும் தரைவிரிப்பு உற்பத்தி தொழில்கள் கொல்கத்தாவின் சணல் தொழிலுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும், சணலை மூலப்பொருளாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் பரிந்துரைத்தார்.
2030-ம் ஆண்டில் 150 பில்லியன் அமெரிக்க டாலர் ஏற்றுமதியுடன் 350 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான ஜவுளி சந்தையின் இலக்கை அடைய தொழில்துறைகளை அமைச்சர் திரு கிரிராஜ் சிங் கேட்டுக்கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2074323
***
IR/RS/DL
(Release ID: 2074400)
Visitor Counter : 21