தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஓய்வு பெற்ற தொலைத்தொடர்பு ஊழியர்களுக்கான முகாம் புதுதில்லியில் நடைபெற உள்ளது

प्रविष्टि तिथि: 18 NOV 2024 6:20PM by PIB Chennai

தொலை தொடர்புத் துறையின் கீழ் உள்ள தொலைத் தொடர்பு கணக்குகளின் முதன்மை கட்டுப்பாட்டாளர் அலுவலகம், 2024 நவம்பர் 20 முதல்  புது தில்லி, பிரசாத் நகரில் உள்ள சஞ்சார் லேகா பவனில் ஓய்வூதியதாரர்களுக்கான முகாமை நடத்த உள்ளது. அதில் பல்வேறு தகவல்கள் அவர்களுக்கு அளிக்கப்பட உள்ளன.

முதுமையில் ஆரோக்கியமாக இருப்பதற்கு தேவையான உணவு மற்றும் சுகாதார மேலாண்மை என்பது குறித்து ராம் மனோகர் லோகியா மருத்துவமனையின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட உள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்கும் வங்கிகள் மூலம் டிஜிட்டல் நிதி அறிவு மற்றும் முதலீட்டு விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கான முகாம்கள் நடைபெற உள்ளன.

ஓய்வூதியதாரர்களிடையே டிஜிட்டல் வாழ்நாள்  சான்றிதழ் சரிபார்ப்பு பயன்பாட்டை ஊக்குவித்தல் மற்றும்  அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2074346

--------------

TS/IR/RS/DL


(रिलीज़ आईडी: 2074387) आगंतुक पटल : 82
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी