இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உலக ஊக்கமருந்து தடுப்பு முகமையின் உலகளாவிய கற்றல் மற்றும் மேம்பாட்டு கட்டமைப்பு முடிவுகள் மேலாண்மை பயிற்சி 2024, நவம்பர் 19-22-ல் புதுதில்லியில் நடைபெறவுள்ளது

Posted On: 18 NOV 2024 10:47AM by PIB Chennai

உலக ஊக்கமருந்து தடுப்பு முகமையுடன்  இணைந்து, உலகளாவிய கற்றல் மற்றும் மேம்பாட்டு கட்டமைப்பு  முடிவுகள் மேலாண்மை பயிற்சியை 2024 நவம்பர் 19-22 வரை இந்தியா நடத்த உள்ளது. உலக ஊக்கமருந்து தடுப்பு முகமை (WADA), ஜப்பான் விளையாட்டு முகமை, ஜப்பான் ஊக்கமருந்து தடுப்பு நிறுவனம் ஆகியவற்றின் ஆதரவுடன் இந்திய தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையால் புதுதில்லியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த முக்கிய நிகழ்வு, உலகளாவிய ஊக்கமருந்து எதிர்ப்புச் சூழல் அமைப்பை வலுப்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை வலியுறுத்திக் காட்டுகிறது.

நான்கு நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சியில் மாலத்தீவுகள், மியான்மர், நேபாளம், மலேசியா, தாய்லாந்து, உஸ்பெகிஸ்தான், வியட்நாம், பிலிப்பைன்ஸ், புருனே, கிர்கிஸ்தான், லாவோஸ் உள்ளிட்ட 10-க்கும் அதிகமான  நாடுகளைச் சேர்ந்த ஊக்கமருந்து தடுப்பு வல்லுநர்கள் பங்கேற்பார்கள்.

உலகளாவிய கற்றல் மற்றும் மேம்பாட்டு கட்டமைப்பு  முடிவுகள் மேலாண்மை பயிற்சி என்பது வாடாவின் திறன் வளர்ப்பு கட்டமைப்பின் கீழ் ஓர் அத்தியாவசிய முயற்சியாகும். இது பல்வேறு திட்டப் பகுதிகளில் ஊக்கமருந்து தடுப்பு பயிற்சியாளர்களின் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை மேம்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. இது குறிப்பாக முடிவுகள் நிர்வாகத்தில் கவனம் செலுத்துகிறது.

வழக்கு மேலாண்மை, தீர்ப்பு நடைமுறைகள் மற்றும் உலக ஊக்கமருந்து தடுப்புக் குறியீடு, சர்வதேச தரநிலைகளின் பயன்பாடு போன்ற முக்கியத் தலைப்புகளை உள்ளடக்கிய தீவிரப் பயிற்சி அமர்வுகளில் பங்கேற்பாளர்கள் கலந்து கொள்வார்கள். இந்தப் பயிற்சிகள் ஊக்கமருந்து தடுப்பு நடைமுறைகளை தரப்படுத்துதல், நாடுகளிடையே ஒத்துழைப்பை வளர்த்தல், உலகளாவிய விளையாட்டு ஒருமைப்பாடு கட்டமைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளன.

இந்தியாவில் இந்த நிகழ்வை நடத்துவது ஊக்கமருந்து தடுப்பு இயக்கத்தில் நாட்டின் பங்களிப்பை பிரதிபலிக்கிறது. ஏனெனில் முறையான விளையாட்டை மேம்படுத்துவதில் சர்வதேச ஒத்துழைப்பை நாடு தொடர்ந்து ஆதரிக்கிறது. நியாயமான, ஊக்கமருந்து இல்லாத விளையாட்டு சூழலை உறுதி செய்வதில் வளர்ந்து வரும் சவால்களுடன், பல்வேறு திட்டப் பகுதிகளில் உள்ள பயிற்சிகள், பங்கேற்கும் நாடுகளைச் சேர்ந்த ஊக்கமருந்து தடுப்பு பயிற்சியாளர்களிடையே அறிவுப் பரிமாற்றத்தையும்  திறன் மேம்பாட்டிற்கான குறிப்பிடத்தக்க வாய்ப்பையும் வழங்குகின்றன.

***

(Release ID: 2074156)

TS/SMB/RR/KR

 


(Release ID: 2074295) Visitor Counter : 18