பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் இயக்கம் 3.0 -ன் 2-வது வார நிறைவில் 77 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் பயனடைந்தனர்

Posted On: 18 NOV 2024 10:58AM by PIB Chennai

ஜீவன் பிரமான் என்பது ஓய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல் அதிகாரமளித்தலுக்கான பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையால் உருவான திட்டமாகும். ஓய்வூதியம் வழங்கும் வங்கிகள், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை, பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டு ஜெனரல், ரயில்வே அமைச்சகம், தொலைத் தொடர்புத் துறை, அஞ்சல் துறை, ஐஐபிபி, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலச் சங்கங்கள் ஆகியவை ஓய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல் அதிகாரமளித்தல் என்ற தொலைநோக்கு பார்வையை நனவாக்க  அரசு அணுகுமுறையுடன் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகின்றனர்.

ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை 2024 நவம்பர் 6 அன்று புதுதில்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் ஓய்வூதியதாரர்களின் டிஜிட்டல் அதிகாரமளித்தலுக்காக நாடு தழுவிய டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் இயக்கம் 3.0 ஐ அறிமுகப்படுத்தியது. டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் இயக்கம் 3.0 நவம்பர் 1 முதல் 30 ஆம் தேதி வரை இந்தியாவின் 800 சிறு நகரங்கள்/ நகரங்களில் நடைபெறுகிறது. 2024 நவம்பர் 1 முதல் 17ஆம் தேதி வரை 800 நகரங்கள் / மாவட்டங்களில் 1575 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதற்காக நாடு முழுவதும் 1.8 லட்சம் தபால்காரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்த இயக்கத்தில், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை அனைத்து ஓய்வூதியதாரர்களிடையேயும் டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ்- முக அடையாள நுட்பம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளையும் அலுவலகங்கள் மற்றும் அனைத்து வங்கிக் கிளைகள் / ஏடிஎம் மைங்களில் மேற்கொண்டு வருகிறது. அனைத்து வங்கிகளும் தங்கள் கிளைகளில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் குழுவை உருவாக்கி, தேவையான செயலிகளை ஸ்மார்ட் போன்களில் பதிவிறக்கம் செய்து, ஓய்வூதியதாரர்கள் வாழ்நாள் சான்றிதழ்களை சமர்ப்பிப்பதற்கு இந்தத் தொழில்நுட்பத்தை பெருமளவில் பயன்படுத்துகின்றனர். முதுமை / நோய் / பலவீனம் காரணமாக ஓய்வூதியதாரர்கள் வங்கிக் கிளைகளுக்கு வர முடியாத நிலையில், வங்கி அதிகாரிகளும் சம்பந்தப்பட்டவர்களின் வீடுகள் / மருத்துவமனைகளுக்கே செல்கின்றனர்.

இந்த 3.0 இயக்கம் தொடங்கப்பட்ட 2- வது வாரத்தின் முடிவில் 77 லட்சத்திற்கும் அதிகமான டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ்கள் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளன. இதில் 90 வயதுக்கு மேற்பட்ட சுமார் 1,77,153 ஓய்வூதியதாரர்கள் மற்றும் 80 - 90 வயதுக்குட்பட்ட 17,212 ஓய்வூதியதாரர்கள்தங்கள் வீடு / இருப்பிடம் / அலுவலகங்கள் / கிளைகளில் வழங்கப்பட்ட சேவைகள் மூலம் தங்கள் வாழ்நாள் சான்றிதழ்களை சமர்ப்பிக்க முடிந்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2074158

*****

TS/IR/RS/KR

 


(Release ID: 2074291) Visitor Counter : 22