அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை இந்திய பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை உருமாற்றுவதற்கான 'விரைவான கண்டுபிடிப்பு, ஆராய்ச்சிக்கான கூட்டாண்மை' திட்டத்தை தொடங்குவதாக அறிவித்துள்ளது
Posted On:
14 NOV 2024 4:10PM by PIB Chennai
தரமான ஆராய்ச்சி சார்ந்த உயர்கல்விக்கான பிரதமரின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் வகையில், அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை விரைவுபடுத்தப்பட்ட கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சிக்கான கூட்டாண்மை திட்டத்தை தொடங்குவதாக அறிவித்துள்ளது.
அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் செயல்பாடானது 2024 செப்டம்பர் 10 அன்று நிர்வாகக் குழுவின் முதல் கூட்டத்துடன் தொடங்கப்பட்டது. நிர்வாக குழுவின் தலைவராக பிரதமர் இக்கூட்டத்துக்கு தலைமை தாங்கினார்.
அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையானது நாட்டின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சூழல் அமைப்புக்கு ஒரு புதிய தொடக்கத்தைக் குறிக்கிறது. இதற்கேற்ப, 'விரைவான கண்டுபிடிப்பு, ஆராய்ச்சிக்கான கூட்டாண்மை' திட்டம் இந்தியப் பல்கலைக்கழகங்களில் பெரிய உருமாற்றத்தைக் கொண்டு வரும்.
தேசிய கல்விக் கொள்கை 2020-ல் நிர்ணயிக்கப்பட்ட நோக்கங்களுடன் இணைந்த 'விரைவான கண்டுபிடிப்பு, ஆராய்ச்சிக்கான கூட்டாண்மை' என்ற முன்முயற்சி, இந்திய பல்கலைக்கழகங்களில், குறிப்பாக வரையறுக்கப்பட்ட ஆராய்ச்சி திறன்களைக் கொண்ட மத்திய மற்றும் மாநில பொதுப் பல்கலைக்கழகங்களில், உயர்மட்ட நிறுவனங்களுடன் ஒத்துழைப்பை வளர்ப்பதன் மூலம் ஆராய்ச்சி சிறப்பை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2073282
----
TS/IR/KPG/DL
(Release ID: 2073463)
Visitor Counter : 8