பாதுகாப்பு அமைச்சகம்
வருடாந்திர கடற்படை விமான பாதுகாப்பு கூட்டம் மற்றும் விமான பாதுகாப்பு கருத்தரங்கு - 2024
Posted On:
14 NOV 2024 10:45AM by PIB Chennai
கிழக்கு கடற்படை தலைமையகத்தின் கீழ் விசாகப்பட்டினத்தில் உள்ள ஐஎன்எஸ் தேகாவில் நவம்பர் 12-13 தேதிகளில் 2024 ஆம் ஆண்டிற்கான விமான பாதுகாப்பு கருத்தரங்கு மற்றும் வருடாந்திர கடற்படை விமான பாதுகாப்பு கூட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. விமான பாதுகாப்பு கருத்தரங்கு நவம்பர் 12 அன்று தொடங்கியது, தலைமை விருந்தினராக, கிழக்கு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தர்கர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
"வளர்ந்து வரும் அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்கள் - கடற்படை விமான செயல்பாடுகள் மற்றும் விமான பாதுகாப்புடன் இணக்கம்" என்ற கருப்பொருளை மையமாகக் கொண்ட இந்தக் கருத்தரங்கில் தொழில்நுட்பங்கள் மற்றும் உத்திகளில் முன்னேற்றங்கள், விமான நடவடிக்கைகளில் சைபர் பாதுகாப்பு அபாயங்கள் மற்றும் விமான அமைப்புகளுக்கான எதிர்நடவடிக்கைகள் உள்ளிட்ட சமகால தலைப்புகளில் கவனம் செலுத்தப்பட்டது. விமான நடவடிக்கைகளின் போது மன வலிமைக்கான 'நினைவாற்றல் பயிற்சி'யின் முக்கியத்துவமும் விவாதிக்கப்பட்டது.
இந்த விவாதங்கள் அதிகரித்து வரும் செயல்பாட்டு அபாயங்களை நிர்வகிப்பதற்கான ஒரு முழுமையான அணுகுமுறையை ஊக்குவிக்கின்றன.அதுமட்டுமல்லாமல்வான்வழி சொத்துக்களைப் பாதுகாப்பதற்கான சேவைகளுக்கிடையே பகிரப்பட்ட விழிப்புணர்வின் அவசியத்தையும் வலியுறுத்தின. நவீன கடற்படை விமானப் போக்குவரத்தில் உள்ள சவால்களுக்கு ஏற்ப தகவமைப்பு மற்றும் செயலூக்கமான பாதுகாப்பு உத்திகளின் வளர்ந்து வரும் தேவையை இந்தக் கருத்துப் பரிமாற்றம் விளக்கியது. இந்த நிகழ்ச்சியில் இந்திய ராணுவம், இந்திய விமானப்படை, இந்திய கடலோரக் காவல்படை மற்றும் எச்ஏஎல் போன்ற முக்கிய பாதுகாப்பு அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
நவம்பர் 13 அன்று நடைபெற்ற கடற்படை விமானப் பாதுகாப்பு கூட்டத்தில் இந்திய கடற்படையின் விமான பாதுகாப்பு தொடர்பான முக்கிய பங்குதாரர்கள் கலந்து கொண்டனர். கடற்படை ஊழியர்களின் (விமானம்) உதவித் தளபதி ரியர் அட்மிரல் ஜனக் பெவில் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். அனைத்து செயல்பாட்டு பணிகளையும் பூர்த்தி செய்து பாதுகாப்பாக பறப்பதை உறுதி செய்வது குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.
நிகழ்வின் இரண்டு நாட்களிலும் கவனத்தை ஈர்க்கும் வகையில் குழு விவாதங்கள் மற்றும் நிபுணர் தலைமையிலான விளக்கக்காட்சிகள் இடம்பெற்றன. இது விமான பாதுகாப்பு நெறிமுறைகளை மேம்படுத்துவதற்கும், கடற்படை விமானப் போக்குவரத்தில் உயர்தரமான தயார்நிலையை உறுதி செய்வதற்கும் இந்திய கடற்படையின் உறுதிப்பாட்டை விளக்கியது.
***
TS/PKV/KV/KR
(Release ID: 2073237)
Visitor Counter : 8