சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
நிதி ஆயோக்கின் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால், 2024 நவம்பர் 14 அன்று பாரத மண்டபத்தில் சுகாதார அரங்கைத் திறந்து வைக்கிறார்
Posted On:
13 NOV 2024 11:41AM by PIB Chennai
நிதி ஆயோக்கின் உறுப்பினர் (சுகாதாரம்), டாக்டர் வி.கே.பால், புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 2024 நவம்பர் 14 அன்று (நாளை) நடைபெறும் 43-வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியில் (ஐ.ஐ.டி.எஃப்) சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சுகாதார அரங்கைத் திறந்து வைக்கிறார்.
'ஒரே ஆரோக்கியம்' என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு இந்த ஆண்டின் கண்காட்சி நடைபெறுகிறது. இது மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் ஒன்றோடொன்று இணைந்திருப்பதை வலியுறுத்தும் ஒரு விரிவான அணுகுமுறையாகும். இவ்வாறு ஒன்றோடொன்று சார்ந்திருப்பதை அங்கீகரிப்பதன் மூலம், 'ஒரே ஆரோக்கியம்' பல்வேறு துறைகள், மற்றும் சமூகங்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் சவால்களை திறம்பட எதிர்கொள்வதற்கும் அணிதிரட்ட முற்படுகிறது.
சுகாதார அரங்கின் சிறப்பம்சங்கள்:
● 19 திட்டப் பிரிவுகளில் சாதனைகளைக் காட்சிப்படுத்துதல்: 39 தகவல் அரங்குகள் மூலம், அரங்கின் சுகாதாரப் பராமரிப்பில் அமைச்சகத்தின் முக்கிய சாதனைகள், வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் பரவியிருக்கும் திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகள் பற்றிய சிறப்பம்சங்கள் பறைசாற்றப்படும்.
கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இலவச தடுப்பூசி போட உதவும் யு-வின் செயலியை அறிமுகப்படுத்தியது. ஆயுஷ்மான் பாரத் - பிரதமரின் ஜன் ஆரோக்கிய திட்டத்தில் (ஏபி-பிஎம்ஜேஏஒய்) இப்போது 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களை உள்ளடக்கியது. கூடுதலாக ரூ.5 லட்சம் அதிக காப்பீடு, அனைவருக்கும் அணுகக்கூடிய, தரமான சுகாதார சேவையை வழங்குவதற்கான இந்தியாவின் முயற்சிகளை இந்த அரங்கம் பிரதிபலிக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2072936
***
PKV/RR/KR
(Release ID: 2072945)
Visitor Counter : 32