புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
அக்டோபர் 2024 மாதத்திற்கான நுகர்வோர் விலைக் குறியீட்டெண் வெளியீடு
இடுகை இடப்பட்ட நாள்:
12 NOV 2024 4:00PM by PIB Chennai
I. முக்கிய சிறப்பம்சங்கள்:
1. 2024, அக்டோபர் மாதத்திற்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI) அடிப்படையில் ஆண்டு பணவீக்க விகிதம் 6.21% ஆகும். இதில் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களுக்கான பணவீக்க விகிதங்கள் முறையே 6.68%, 5.62% ஆகும்.
2. அக்டோபர் மாதத்திற்கான. அகில இந்திய உணவு விலைக் குறியீட்டெண் (CFPI) அடிப்படையிலான ஆண்டு பணவீக்க விகிதம் 10.87% ஆகும். இதில், கிராமப்புற, நகர்ப்புறங்களுக்கான பணவீக்க விகிதம் முறையே 10.69%, 11.09% ஆகும்.
3. அக்டோபர் மாதத்திற்கான வீட்டுவசதி பணவீக்க விகிதம் 2.81% ஆகும். செப்டம்பர் மாதத்தில் இது 2.72% இருந்தது. வீட்டுவசதி குறியீடு நகர்ப்புறங்களில் மட்டும் கணக்கிடப்படுகிறது.
4. அகில இந்திய மின்சார குறியீடு மற்றும் பணவீக்கம் அக்டோபர் மாதத்தில் 162.5 மற்றும் 5.45 சதவீதமாகும். இது செப்டம்பர் மாதத்தில் 162.4 மற்றும் 5.39 சதவீதமாக இருந்தது.
5. அக்டோபர் 2024 பருப்பு வகைகள், முட்டை, சர்க்கரை, அடுமனை தயாரிப்பு பொருட்கள், மசாலா பொருட்கள் ஆகியவற்றின் பணவீக்கம் கணிசமான அளவுக்கு குறைந்திருந்தது. இந்த மாதத்தின் பணவீக்க அதிகரிப்பு, காய்கறி, பழங்கள், எண்ணெய் மற்றும் கொழுப்பு வகை பொருட்களின் விலை உயர்வால் ஏற்பட்டது.
மாநில வாரியாக கிராமப்புறம்,நகர்ப்புறங்கள் மற்றும் ஒருங்கிணைந்த நுகர்வோர் விலைக்குறியீடும் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கிராமப்புறங்களில் நுகர்வோர் விலைக்குறியீடு 202.8 சதவீதமாக இருந்தது. நகர்ப்புறங்களில் இது 201.1 சதவீதமாக கணக்கிடப்பட்டது. ஒருங்கிணைந்த அளவில் 2001.8 சதவீதமாக இருந்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2072719
***
PKV/AG/KV
(வெளியீட்டு அடையாள எண்: 2072768)
வருகையாளர் எண்ணிக்கை : 143