நிலக்கரி அமைச்சகம்
நிலக்கரி அமைச்சகம் சிறப்பு இயக்கம் 4.0-ஐ குறிப்பிடத்தக்க சாதனைகளுடன் நிறைவு செய்தது
Posted On:
12 NOV 2024 12:34PM by PIB Chennai
சிறப்பு இயக்கம் 4.0 (அக்டோபர் 2-31, 2024-ன் போது, நிலக்கரி அமைச்சகம் அதன் பொதுத்துறை நிறுவனங்கள், இணைக்கப்பட்ட அலுவலகங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளுடன் இணைந்து இயக்கத்தில் உற்சாகத்துடன் பங்கேற்று சிறந்த முடிவுகளை எட்டியது. முக்கிய நடவடிக்கைகளில், விரைவான மதிப்புரைகள் மற்றும் காகித மற்றும் மின்னணு கோப்புகளை ஒழிப்பது ஆகியவை அடங்கும். நாடாளுமன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்களின் குறிப்புகள், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் பிரதமர் அலுவலக குறிப்புகளின் எண்ணிக்கை நிலுவையில் இருப்பதை குறைப்பதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.
கழிவுப் பொருட்களை அகற்றியதன் மூலம், நிலக்கரி அமைச்சகம், இடங்களை விடுவிப்பதில் (78.46 லட்சம் சதுர அடி) முதல் இடத்தையும், கழிவுப் பொருட்கள் விற்பனை மூலம் வருவாய் ஈட்டுவதில் (ரூ. 38.27 கோடி) 4வது இடத்தையும் (ரூ. 38.27 கோடி) பெற்றதுடன் அனைத்து அமைச்சகங்கள்/துறைகளிடையே, வளங்களை உகந்ததாக்குதல் மற்றும் நிலைத்தன்மையில் ஒத்துழைப்பு அமைச்சகத்தின் செயலூக்கமான முயற்சிகளை வெளிப்படுத்தியது (06.11.2024 அன்று SC4.0 மீதான 8வதுஆய்வுக் கூட்டத்தில் நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறை தீர்வுத் துறை குறிப்பிட்டுள்ளபடி). இந்த இயக்கத்தின் போது நிறைவேற்றப்பட்ட சாதனைகளின் தொகுப்பு வருமாறு:
வ. எண்
|
செயற்பாடுகள்
|
இலக்குகள்
|
சாதனை
|
1
|
தூய்மை இயக்க இடங்களின் எண்ணிக்கை
|
964
|
1,116(115%)
|
2
|
விடுவிக்கப்பட்ட இடம்
|
78,46,345 சதுர அடி.
|
3
|
அகற்றப்பட்ட கழிவுப் பொருட்கள்
|
9,865 மெட்ரிக் டன்
|
4
|
ஈட்டப்பட்ட வருவாய்
|
ரூ. 38,26,80,742
|
5
|
கோப்புகளின் மதிப்பாய்வு
|
19,091
|
30,999(162%)
|
6
|
முடிக்கப்பட்ட கோப்புகள்
|
10,599
|
7
|
மின்னணு கோப்புகள் மதிப்பாய்வு
|
34,442
|
40,633(117%)
|
8
|
முடிக்கப்பட்ட மின்னணு கோப்புகள்
|
15,365
|
9
|
பொதுமக்கள் குறைதீர்ப்பு
|
167
|
166(99.4%)
|
10
|
பிரதமர் அலுவலக குறிப்புகள்
|
136
|
136(100%)
|
11
|
நாடாளுமன்ற உறுப்பினர்களின் குறிப்பு
|
51
|
48(94%)
|
அலுவலக வளாகங்கள் மற்றும் அருகிலுள்ள பகுதிகளுக்குள் உள்ள பெரிய பகுதிகளை அகற்ற, தூய்மை முயற்சிகள் வழிவகுத்தன. மேலும் பயன்பாட்டிற்கு உகந்த இடத்தை உருவாக்கின. இந்த முயற்சி, தூய்மையான சுற்றுச்சூழலுக்கு பங்களித்ததுடன், பழைய பொருட்களை அப்புறப்படுத்தியதன் மூலம் அதிக அளவு வருவாயையும் ஈட்டியது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2072656
***
MM/RR/KR
(Release ID: 2072685)
Visitor Counter : 23