சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய உணவு தர பாதுகாப்பு ஆணையத்தின் 45-வது மத்திய ஆலோசணைக் குழுக் கூட்டம், சுற்றுலா தலங்களில் மேம்பட்ட உணவு பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளது

Posted On: 08 NOV 2024 11:48AM by PIB Chennai

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (எஃப்எஸ்எஸ்ஏஐ) 45-வது மத்திய ஆலோசனைக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. நவம்பர் முதல் மார்ச் வரையிலான சுற்றுலாப் பருவத்தை முன்னிட்டு பிரபல சுற்றுலாத் தலங்களில் கண்காணிப்பை அதிகரிக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்பட்டன.

இந்த பருவத்தில் பிரபலமான இடங்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருவதை மனதில் கொண்டு, இந்த சுற்றுலாத் தலங்களில் நடமாடும் உணவுப் பாதுகாப்பு ஆய்வகங்களைப் பயன்படுத்துமாறு மாநிலங்கள் /  யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

மின்னணு வணிகத் தளங்களால் பயன்படுத்தப்படும் கிடங்குகள் மற்றும் பிற வசதிகள் மீது, கண்காணிப்பை அதிகரிக்குமாறும் பல்வேறு மாநிலங்களின் உணவு ஆணையர்களை எஃப்எஸ்எஸ்ஏஐ தலைமை நிர்வாக அதிகாரி திரு ஜி கமல வர்தன ராவ் கேட்டுக் கொண்டார். அத்தகைய கிடங்குகளுக்கும், இந்த தளங்களின் விநியோக பணியாளர்களுக்கும் செயல்பாட்டு வழிமுறைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள், கண்காணிப்பு மாதிரிகளை அதிகரிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டன. மேலும் இந்த நோக்கத்திற்காக நடமாடும் உணவுப் பாதுகாப்பு வாகனங்களை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டன.

அனைத்து குடிமக்களுக்கும் உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்வதற்காக, அனைத்து மாநிலங்கள்  / யூனியன் பிரதேசங்களில் உணவுப் பாதுகாப்பு பயிற்சி மற்றும் சான்றிதழின் (FoSTaC) கீழ் உணவு வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு (FBOs) பயிற்சி அளிக்கவும், குழு முக்கியத்துவம் அளித்தது. பல்கலைக்கழகம், கல்லூரி மற்றும் விடுதி கேன்டீன்கள் உட்பட 25 லட்சம் உணவு கையாளுபவர்களுக்கு 2026 மார்ச் மாதத்திற்குள் பயிற்சி அளிக்க மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் வலியுறுத்தப்பட்டன.

ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு அணுகுமுறையின் அவசியத்தை வலியுறுத்தி, தொடர்புடைய அனைத்து அமைச்சகங்களும், பங்குதாரர்களும் ஒத்துழைக்க வலியுறுத்தியதுடன், மாநில மற்றும் மாவட்ட அளவில் ஆலோசனைக் குழுக் கூட்டங்களை தவறாமல் கூட்டுமாறு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களை ஊக்குவித்தது.

ஈட் ரைட் இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக, ஆரோக்கியமான உணவு கலாச்சாரத்தை வளர்ப்பதில் நுகர்வோரை தீவிரமாக ஈடுபடுத்துவதன் முக்கியத்துவத்தை இந்தக் கூட்டம் வலியுறுத்துகிறது. கண்காட்சிகள், நடைபயிற்சி மற்றும் தெரு நாடகங்கள் (நுக்காட் நாடகங்கள்) போன்ற மக்கள் தொடர்பு முயற்சிகள் மூலம் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வை அதிகரிக்கவும் மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

உணவுப் பாதுகாப்பு ஆணையர்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள், உணவுப் பாதுகாப்புத் துறை, நுகர்வோர் குழுக்கள், வேளாண் துறை, ஆய்வகங்கள் மற்றும் ஆராய்ச்சி அமைப்புகளின் உறுப்பினர்கள் உட்பட 60-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

---

(Release ID 2071719)

MM/KPG/KR


(Release ID: 2071731) Visitor Counter : 21