குடியரசுத் தலைவர் செயலகம்
கோவாவில் 'டே -அட் -சீ' நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பங்கேற்றார்
Posted On:
07 NOV 2024 8:48PM by PIB Chennai
கோவாவில் இன்று (நவம்பர் 7, 2024) நடைபெற்ற 'டே -அட்- சீ' நிகழ்ச்சியில் இந்தியக் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார். 'டே -அட்- சீ' நிகழ்வின் போது, ஐ.என்.எஸ் விக்ரந்த் தளத்திலிருந்து தனது மிக் 29 கே புறப்படுவது, தரையிறங்குவது, போர்க்கப்பல் கப்பலிலிருந்து ஏவுகணை செலுத்துதல் நீர் மூழ்கிக் கப்பல் செயல்பாடுகள் உள்ளிட்ட கடற்படையின் பல நடவடிக்கைகளைப் பார்வையிட்டார். இந்தியக் கடற்படையின் பங்கு, கடமை சாசனம் மற்றும் செயல்பாடுகளின் கருத்துநிலை குறித்து அவருக்கு விளக்கப்பட்டது. ஐஎன்எஸ் விக்ரந்த் கப்பல் குழுவினருடனும் அவர் கலந்துரையாடினார்.
கடற்படையினரிடையே உரையாற்றிய குடியரசுத்தலைவர், இந்தியா பல ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வளமான கடல்சார் வரலாற்றைக் கொண்டுள்ளது. இது சாதகமான கடல்சார் புவியியலால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. 7500 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரையைக் கொண்டுள்ள இந்தியாவின் கடல்சார் புவியியல் பொருளாதார வளர்ச்சி, பிராந்திய இணைப்பு மற்றும் ராணுவ செல்வாக்கிற்கு பல வாய்ப்புகளை வழங்குகிறது. வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதற்கான நமது பயணத்தில் நமக்கு மிகப்பெரிய கடல்சார் திறன் உள்ளது என்றார்.
உலகளாவிய புவிசார் அரசியல் மற்றும் பாதுகாப்புச் சூழலில், குறிப்பாக கடல்சார் களத்தில், தற்போது ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கங்கள், பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் நமது தேசிய கடல்சார் நலன்களைப் பாதுகாக்கவும், தொடரவும் நமது கடற்படை சக்தியை தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும் என்று குடியரசுத்தலைவர் கூறினார். இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியக் கடற்படையின் தயார்நிலை மற்றும் உறுதியான அர்ப்பணிப்பு மூலம்.பாதுகாப்பான மற்றும் அமைதியான சூழலை இந்தியா உறுதி செய்துள்ளது. ஐ.என்.எஸ் விக்ரந்தின் அறிமுகம் மற்றும் செயல்பாடு, அணுசக்தியால் இயங்கும் இந்தியாவின் இரண்டாவது பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ் அரிகாத் மற்றும் மேம்பட்ட முன்னணி போர்க்கப்பல்கள் மற்றும் அதிநவீன கடற்படை உள்கட்டமைப்பைச் சேர்ப்பதன் மூலம் இந்தியாவின் கடல் வலிமை குறிப்பிடத்தக்க ஊக்கத்தைப் பெற்றுள்ளது. இந்த சாதனைகள் இந்தியாவின் அந்தஸ்தை ஒரு வலிமையான பிராந்திய சக்தியாக உறுதிப்படுத்தியுள்ளன என்று அவர் கூறினார்.
அனைத்து நிலைகள் மற்றும் பொறுப்புகளில் பெண்களைச் சேர்ப்பதைத் தாண்டி, நமது கடல் வீரங்கனைகளின் முழுமையான போரிடும் திறனைப் பயன்படுத்திக் கொள்ள இந்தியக் கடற்படை ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது குறித்து குடியரசுத்தலைவர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்திய கடற்படை தனது முதல் பெண் கமாண்டிங் அதிகாரியை ஒரு போர்க்கப்பலில் நியமித்துள்ளது. பெண்களே கடற்படை விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளது. சமீபத்தில் இந்திய கடற்படைக்கு முதல் பெண் ஹெலிகாப்டர் பைலட்டும் கிடைத்துள்ளார். பாலின உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதற்கான இந்தியக் கடற்படையின் முயற்சிகளில் இந்த சாதனைகள் குறிப்பிடத்தக்கவை என்று அவர் கூறினார்.
கடலில் உள்ள அனைத்து படைப்பிரிவுகளுக்கும் குடியரசுத்தலைவரின் உரை ஒளிபரப்பப்பட்டது.
***
(Release ID: 2071628)
SMB/KR
(Release ID: 2071686)
Visitor Counter : 13