தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
iffi banner
0 5

ஐஎஃப்எஃப்ஐ 2024 : வொர்க்-இன்-புரோகிரஸ் ஆய்வகத்தில் ஆறு படங்கள் திரையிடப்படுகின்றன

ஃபிலிம் பஜார் ஆறு புனைகதைப் படங்களை அறிவித்துள்ளது, அவை இந்த ஆண்டு ஐ.எஃப்.எஃப்.ஐயின் வொர்க்-இன்-புரோகிரஸ் ஆய்வகத்திற்கான அதிகாரப்பூர்வ தேர்வில் இடம் பெற்றுள்ளன.

தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள்:

1.ஷேப் ஆஃப் மோமோஸ்– திரிபேனி ராய் (நேபாளி)

2.காங்ஷாலிக்(காங்ஷாலிக் - நதி பறவை) ஷக்தீதர் பீர் (பெங்காலி)

3.எர்ரா மந்தரம்(சிவப்பு செம்பருத்தி) மோகன் குமார் வலசாலா (தெலுங்கு)

4.காத்தி ரி ராத்தி(ஹண்டர்ஸ் மூன்) ரிதம் ஜான்வே (காடி, நேபாளி)

5.சித்தார்த் பாடியின் உமல்(மராத்தி)

6.விவேக் குமாரின் தி குட், தி பேட், தி ஹங்கிரி(இந்தி)

இந்த ஆறு படங்களில் ஐந்துபடங்கள் இளம் மற்றும் வளர்ந்து வரும் திரைப்பட இயக்குநர்களின் அறிமுக படங்களாகும். இந்தப் படங்கள் மாறுபட்ட கதைகளை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், வளமான கலாச்சார முன்னோக்குகளையும் பிரதிபலிக்கின்றன. இந்திய சர்வதேச திரைப்பட விழா (ஐ.எஃப்.எஃப்.ஐ) இந்த மாதம் தனது 55-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இளம் திரைப்பட இயக்குநர்களை மையமாகக் கொண்டு, அவர்களின் புதுமையான கதை சொல்லல் மற்றும் புதிய பார்வைகளை முன்னிலைப்படுத்துகிறது.

வொர்க் – இன் - புரோகிரஸ் ஆய்வகம் திரையரங்க வெளியீட்டை நோக்கமாகக் கொண்ட புனைகதை படங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அதிகபட்சம் ஆறு படங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்களின் இயக்குனர்கள் மற்றும் எடிட்டர்கள் தங்களது படைப்புகள் பற்றி விளக்குவதற்கான தனித்துவமான வாய்ப்பைப் பெறுவார்கள்.

2008 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து, மதிப்புமிக்க சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்ற திரைப்படங்களை வடிவமைப்பதில் வொர்க்-இன்-புரோகிரஸ் லேப் முக்கிய பங்கு வகித்துள்ளது.

ஃபிலிம் பஜார் என்பது தெற்காசிய திரைப்படங்களை சர்வதேச மற்றும் தேசிய சந்தைக்கு மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தளமாகும். ஃபிலிம் பஜாரில் உள்ள பார்வை அறை என்பது திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு சர்வதேச திரைப்பட விழாக்கள், உலக விற்பனை முகவர்கள் மற்றும் வாங்குபவர்களுக்கு தனித்தனியாக தங்கள் படத்தை விளம்பரப்படுத்த வழங்கப்படும் கட்டண தளமாகும்.

****

PKV/KPG/DL

iffi reel

(Release ID: 2071528) Visitor Counter : 44