தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா: எல்லைகளைக் கடந்த திரைப்படம்

Posted On: 06 NOV 2024 7:55PM by PIB Chennai

ஒரு சில நாட்களில், 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (ஐ.எஃப்.எஃப்.ஐ) கோவாவின் பனாஜியில் தொடங்கவிருக்கிறது. உலகளாவிய கலாச்சாரம், திறமை மற்றும் திரைப்பட கொண்டாட்டத்தின் கலகலப்பான மையமாக கடற்கரை பிரதேசத்தை இந்த நிகழ்வு மாற்றுகிறது. திரைப்பட ஆர்வலர்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் ஆர்வமுள்ள திரைப்பட தயாரிப்பாளர்கள், தங்கள் படங்களின் திரையிடலுக்காக மட்டுமல்லாமல், அது வழங்கும் தனித்துவமான அனுபவத்தினாலும் ஈர்க்கப்படுகிறார்கள். கலாச்சார எல்லைகளைக் கடந்து திரைப்படத்தின் கலைத்தன்மையைப் பாராட்ட அனைத்து தரப்பு மக்களையும் இந்த விழா அழைக்கிறது.

 

1952-இல் அதன் தொடக்கத்திலிருந்து, ஐ.எஃப்.எஃப்.ஐ, உலகெங்கிலும் உள்ள கதைசொல்லல், கலாச்சாரம் மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றின் பன்முகத்தன்மையைக் கொண்டாடும் திரைப்படங்களை விளம்பரப்படுத்துவதற்கான முதன்மையான தளமாக உருவாகியுள்ளது. இந்தியாவின் திரைப்படத் துறை, உலகளவில் ஒரு முக்கிய உள்ளடக்கத்தை உருவாக்கும் மையமாக மாறுவதற்கு முன்னேறி வரும் நிலையில், ஐ.எஃப்.எஃப்.ஐ வெறும் திருவிழா மட்டுமல்ல, இது சர்வதேச திரைப்படத்துறையில் இந்தியாவின் வளர்ந்து வரும் பங்கையும் வெளிப்படுத்துகிறது. அதேநேரத்தில் சமூக இணைப்பு மற்றும் மாற்றத்திற்கான ஊடகமாக திரைப்படத்தின் ஆற்றலுக்கு மரியாதை செலுத்தவும் இது தவறுவதில்லை.

 

 

 

திரைப்படத் தயாரிப்பாளர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், புதிய பார்வையாளர்களை அடையவும், தனித்துவமான கதைகளைப் பகிர்ந்து கொள்ளவும் ஐ.எஃப்.எஃப்.ஐ ஒரு வாய்ப்பை வழங்குகிறது. அதன் போட்டிப் பிரிவுகள், வலையமைப்பு நிகழ்வுகள் மற்றும் கல்விசார் பயிலரங்கங்கள் ஆகியவற்றின் காரணமாக, இந்த விழா, குறிப்பாக வளர்ந்து வரும் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு இன்றியமையாத தளமாக மாறியுள்ளது. இந்திய திரைப்படத் துறை ஏற்கனவே பல்வேறு மாறுபட்ட கதைகள், வகைகள் மற்றும் நுட்பங்களின் துடிப்பான சூழலாக உள்ளது. இந்திய திரைப்படத் தயாரிப்பாளர்களை சர்வதேச தளங்களில் அறிமுகப்படுத்துவதன் மூலம் ஐ.எஃப்.எஃப்.ஐ இதை விரிவுபடுத்துகிறது.

 

வரும் நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் நடைபெறும் 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, வெறும் படங்களின் தொகுப்பு அல்ல, இது ஒற்றுமை, படைப்பாற்றல் மற்றும் பகிரப்பட்ட மனித அனுபவத்தின் உணர்வை உள்ளடக்கியது. ஐ.எஃப்.எஃப்.ஐ என்பது கதைசொல்லலின் உலகளாவிய மொழியின் மூலம் மக்களை ஒன்றிணைப்பதாகும், இது மாறுபட்ட குரல்களைக் கேட்கவும், கொண்டாடவும் ஒரு இடத்தை வழங்குகிறது. ஆளுமைகளுக்கு மரியாதை செலுத்தி,  வளர்ந்து வரும் திறமைகளைக் கொண்டாடி, உள்ளடக்கத்திற்கு முக்கியத்துவம்  அளிக்கும் இந்த ஆண்டின் திருவிழா, உலகளாவிய திரைப்படத் துறையில் ஐ.எஃப்.எஃப்.ஐ-இன் நீடித்த பாரம்பரியத்திற்கு ஒரு சான்றாகும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2071321

AD/BR/KR

 

(Release ID: 2071321)

 

 

***


(Release ID: 2071421) Visitor Counter : 62