சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம், அகில இந்திய தொழில்நுட்பக் குழுமம் இடையே இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைத் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

Posted On: 06 NOV 2024 7:10PM by PIB Chennai

மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய பொதுத் துறை நிறுவனமான தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம்  இடையே இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் செயல் இயக்குநர் திரு நிதின் சர்மா மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமத் தலைமை ஒருங்கிணைப்பு அதிகாரி டாக்டர் புத்த சந்திரசேகர் ஆகியோர் கூட்டாக கையெழுத்திட்டனர்.

தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநர் டாக்டர் கிரிஷன் குமார், கல்வி உதவித்தொகைத் திட்டத்திற்கான இணையதளத்தைத் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் நாடு முழுவதும் குறிப்பாக வடகிழக்கு பிராந்தியம், ஜம்மு காஷ்மீர், லடாக், அந்தமான் & நிக்கோபர் தீவுகளில் உள்ள இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கு அனுபவ கற்றல் வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2071286

----

AD/IR/KPG/DL




(Release ID: 2071339) Visitor Counter : 12


Read this release in: English , Urdu , Hindi