கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மைசூரு சங்கீத நறுமணம் – கர்நாடகாவின் இசை பாரம்பரியம் மற்றும் கலாச்சார அம்சங்களின் ஒரு பெரிய கொண்டாட்டம்

Posted On: 06 NOV 2024 6:34PM by PIB Chennai

வளமான கலாச்சாரம் மற்றும் வரலாற்று முக்கியத்துவத்திற்கு பெயர் பெற்ற மைசூருவில், கர்நாடக மாநில திறந்த நிலை பல்கலைக்கழக பட்டமளிப்பு அரங்கில் மைசூரு சங்கீத நறுமணத் திருவிழா 2024 நவம்பர் 8 முதல் 10 வரை நடைபெற உள்ளது. இந்த மூன்று நாள் இசை மற்றும் கலாச்சார விழா கர்நாடக இசையின் மதிப்பிற்குரிய தாசா மரபுகளைக் கொண்டாடும் கர்நாடகாவின் கலை பாரம்பரியத்தின் கண்கவர் காட்சியாக அமையும்.

கர்நாடக சுற்றுலாத் துறை மற்றும் மத்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் ஆதரவுடன், கலாச்சார அமைச்சகம் மற்றும் சங்கீத நாடக அகாடமி ஆகியவற்றுடன் இணைந்து சுற்றுலா அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த திருவிழா மாநிலத்தின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை முன்னிலைப்படுத்தும் கூட்டு முயற்சியாகும்.

இந்த விழாவை மத்திய நிதி மற்றும் பெருநிறுவனங்கள் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தொடங்கி வைக்கிறார். இதில் சுற்றுலா, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணையமைச்சர் திரு சுரேஷ் கோபி, கர்நாடக அரசின் சமூக நலத்துறை அமைச்சர் டாக்டர் எச்.சி.மகாதேவப்பா மற்றும் மைசூரு மக்களவை உறுப்பினர் திரு யதுவீர் கிருஷ்ணதத்தா சாமராஜ உடையார் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இந்த திருவிழா தாசா மரபுகளுக்கு மரியாதை செலுத்துகிறது. இதில்  21 புகழ்பெற்ற கலைஞர்களின் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2071259

-----

TS/IR/KPG/DL




(Release ID: 2071337) Visitor Counter : 8


Read this release in: English , Urdu , Hindi , Kannada