பாதுகாப்பு அமைச்சகம்
இந்தியா – அமெரிக்க ராணுவ ஒத்துழைப்புக் குழுவின் 21-வது கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது
Posted On:
06 NOV 2024 6:08PM by PIB Chennai
இந்தியா – அமெரிக்க ராணுவ ஒத்துழைப்புக் குழுவின் (MCG) 21-வது கூட்டம் 2024 நவம்பர் 05 முதல் 06 வரை புதுதில்லியில் உள்ள மானெக்ஷா மையத்தில் நடைபெற்றது. திறன் வளர்ப்பு, பயிற்சி, பரிமாற்றங்கள், பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்பு, வழக்கமான கூட்டு பயிற்சிகள் உள்ளிட்டவை குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இந்தியா சார்பில் ராணுவ உயரதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ஜே.பி.மேத்யூ, அமெரிக்கா சார்பில் லெப்டினன்ட் ஜெனரல் ஜோசுவா எம் ரூட் ஆகியோர் இந்த கூட்டத்திற்கு கூட்டாகத் தலைமை வகித்தனர். இரு நாடுகளின் மூத்த அதிகாரிகளும் இக்கூட்டத்தில் பங்கேற்று இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.
இந்திய-அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தியதுடன், மேம்பட்ட உத்திசார் செயல் திட்டங்களை வலுப்படுத்த உறுதிபூண்டனர். இந்திய-பசிபிக் பிராந்தியம் எதிர்கொள்ளும் சவால்களை இணைந்து எதிர்கொள்வதுடன், இந்திய-அமெரிக்க ராணுவ ஒத்துழைப்பின் வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான தங்களது நிலையை அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர்.
***
TS/PLM/AG/DL
(Release ID: 2071301)
Visitor Counter : 12