மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
பிரதமரின் வித்யாலட்சுமி திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததற்கு திரு தர்மேந்திர பிரதான் பாராட்டு
Posted On:
06 NOV 2024 5:53PM by PIB Chennai
மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், பிரதமரின் வித்யாலக்ஷ்மி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை பாராட்டினார்.
பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்த திரு தர்மேந்திர பிரதான், நாட்டின் திறமையான இளைஞர்கள் அனைவருக்கும் 21-ம் நூற்றாண்டின் உயர்கல்வி கிடைக்க இந்தத் திட்டம் உதவும் என்று கூறினார். 3,600 கோடி ரூபாய் ஒதுக்கீட்டுடன், இந்தத் திட்டம் உயர்கல்விக்கான தடைகளை நீக்கி, நாட்டின் இளைஞர் சக்தியை அவர்களின் கனவுகளை நனவாக்க உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார். பிரதமரின் வித்யாலட்சுமி திட்டத்தின் கீழ், அடமானம் இல்லாத மற்றும் உத்தரவாதம் இல்லாத கல்விக் கடன்கள் திறமையான மாணவர்களுக்கு உயர் கல்விக்கான அணுகலை அதிகரிக்கும் மற்றும் நிதிக் கட்டுப்பாடுகள் மாணவர்கள் கல்வியைத் தொடர்வதைத் தடுக்காது என்பதை உறுதி செய்யும் என்றும் அவர் எடுத்துரைத்தார்.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் வரை உள்ள மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் வரையிலான கல்விக் கடனுக்கு 3 சதவீத வட்டி மானியமும், ரூ.7.5 லட்சம் வரையிலான கல்விக் கடனுக்கு 75 சதவீத கடன் உத்தரவாதமும் வழங்கப்படும். அனைத்து வங்கிகளுக்கும் பொதுவான, வெளிப்படையான, மாணவர்களுக்கு உகந்த மற்றும் டிஜிட்டல் விண்ணப்ப செயல்முறை மூலம் கல்விக் கடன்கள் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.
---
TS/IR/KPG/DL
(Release ID: 2071295)
Visitor Counter : 161