மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
இணைய பன்முகத்தன்மை, அணுகல் மற்றும் அனைவரையும் உள்ளடக்கும் தன்மையை மேம்படுத்துவதை உறுதி செய்ய, மின்னணு -தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், வட்டமேசை கருத்தரங்கத்தை நடத்தியது
Posted On:
06 NOV 2024 4:13PM by PIB Chennai
மின்னணு-தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்தியாவின் தேசிய இணைய பரிமாற்ற அமைப்பு (NIXI-நிக்ஸி) ஒதுக்கீடு செய்யப்பட்ட பெயர்கள், எண்களுக்கான இணைய நிறுவனம் (ஐசிஏஎன்என்) ஆகியவற்றுடன் இணைந்து, புதிய பொதுவான உயர்மட்ட களங்களின் (gTLD) ஒரு பகுதியாக ஐசிஏஎன்என் விண்ணப்பதாரர் ஆதரவு திட்டம் (ASP)குறித்த வட்டமேசை கருத்தரஙகை வெற்றிகரமாக நடத்தியது.
இந்த வட்டமேசை கருத்தரங்கத்தில், நிக்ஸியின் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் தேவேஷ் தியாகி, ஐசிஏஎன்என் சார்பில் ஆசிய பசிபிக் நிர்வாக இயக்குனர் துணைத் தலைவர் திரு. சமிரன் குப்தா, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) விஞ்ஞானி திரு சந்தோஷ் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். விண்ணப்ப செயல்முறைகளும், தேவைகளும் குறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்க இந்த கருத்தரங்கம் ஒரு தளத்தை வழங்கியது.
ஐசிஏஎன்என் விண்ணப்பதாரர் ஆதரவு திட்டம் பற்றி:
ஐசிஏஎன்என் விண்ணப்பதாரர் ஆதரவுத் திட்டமானது, பொதுவான உயர்மட்ட களங்களுக்கு (gTLD) விண்ணப்பிக்க விரும்பும் நிறுவனங்களுக்கு, நிதியுதவியையும், பிற உதவிகளையும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முன்முயற்சி ஏப்ரல் 2026-ல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ள பரந்துபட்ட புதிய திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இது இணையவெளியை விரிவுபடுத்தி, இணையத்தில் அதிக பன்முகத்தன்மையை ஊக்குவிக்கும்.
நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் தேவேஷ் தியாகி, இந்தியாவில் அனைவரையும் உள்ளடக்கிய இணைய சூழலை உருவாக்குவதில் நிக்ஸியின் உறுதிப்பாட்டை எடுத்துரைத்தார்.
இந்த கருத்தரங்கம் தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு ஒரு தகவல் அமர்வாக செயல்பட்டது.
***
TS/PLM/AG/DL
(Release ID: 2071234)
Visitor Counter : 20