சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
காசநோய் இல்லாத இந்தியாவை நோக்கி: சாதனைகள், சவால்கள் மற்றும் முன்னோக்கிய செல்ல வேண்டிய பாதை
Posted On:
05 NOV 2024 6:35PM by PIB Chennai
காசநோய் ஒழிப்பை செயல்படுத்துவதில் இந்தியாவின் அர்ப்பணிப்புப் பயணம் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 2015 முதல் 2023 வரை காசநோய் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதாவது 17.7% என்ற அளவுக்கு சரிவடைந்தாக, உலக சுகாதார அமைப்பு அதன் உலகளாவிய காசநோய் அறிக்கை 2024 இல் தெரிவித்துள்ளது. இந்த மைல்கல் இந்தியாவின் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் பலனை எடுத்துக்காட்டுகிறது, இது அதிநவீன நோயறிதல், தடுப்பு பராமரிப்பு, நோயாளி ஆதரவு மற்றும் 2025 க்குள் காசநோயை ஒழிக்க வேண்டும் என்ற லட்சிய இலக்கை அடைய கூட்டாண்மயை ஒருங்கிணைக்கும் ஒரு விரிவான உத்தியாகும்.
நீடித்த வளர்ச்சி இலக்கு 3.3 "எய்ட்ஸ், காசநோய், மலேரியா மற்றும் புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்களின் தொற்றுநோய்களை முடிவுக்குக் கொண்டுவருவதையும், ஹெபடைடிஸ், நீரினால் பரவும் நோய்கள் மற்றும் பிற தொற்று நோய்களை 2030-க்குள் எதிர்த்துப் போராடுவதையும்" நோக்கமாகக் கொண்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்குகளில் கையொப்பமிட்டுள்ள இந்தியா, 2030-ம் ஆண்டின் நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாகவே, 2025-க்குள் "காசநோயை ஒழிக்க" இலக்குகளை அடைய உறுதியளித்துள்ளது.
2015 நிலைகளுடன் ஒப்பிடும்போது காசநோய் ஏற்படும் விகிதத்தில் (ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு புதிய தொற்றுகள்) 80% குறைந்துள்ளது.
2015 நிலைகளுடன் ஒப்பிடும்போது காசநோய் இறப்பு விகிதத்தில் 90% குறைந்துள்ளது.
"2025 க்குள் காசநோயை முடிவுக்குக் கொண்டுவருதல்" என்ற அரசின் உறுதிப்பாடு முதன்முதலில் பிரதமர் நரேந்திர மோடியால் மார்ச் 2018-ல் புதுதில்லியில் நடைபெற்ற "காசநோய் முடிவுக்கான உச்சி மாநாட்டில்" வெளிப்படுத்தப்பட்டது மற்றும் உலக காசநோய் தினம் 2023 அன்று வாரணாசியில் நடந்த "ஒரே உலக காசநோய் உச்சி மாநாட்டில்" மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது. இந்த உச்சிமாநாட்டில், காசநோய்க்கு தீர்க்கமான மற்றும் புத்துயிர் அளிக்கும் எதிர்வினையின் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார். கூடுதலாக, ஆகஸ்ட் 2023 இல் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் 2030 க்குள் "காசநோயை முடிவுக்குக் கொண்டுவர நிலைநிறுத்துதல், துரிதப்படுத்துதல் மற்றும் புதுமைப்படுத்துதல்" குறித்த உயர்மட்ட அமைச்சர்கள் கூட்டத்தில் கையெழுத்திட்ட சுகாதார அமைச்சர்கள் மற்றும் உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய அலுவலகம் ஆகியவற்றின் கூட்டுப் பிரகடனமான காந்திநகர் பிரகடனத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
இந்திய அரசு காட்டிய வலுவான அரசியல் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப, காசநோய் ஒழிப்புக்கான தேசிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 2017-2025 இலக்குகள் மற்றும் சாதனைகளுக்கு இடையிலான இடைவெளியைக் குறைப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது, மேலும் இதற்கான மாதிரியை உருவாக்கிய முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
கோவிட்-19 தொற்றுநோயைத் தொடர்ந்து, தேசிய உத்திகள் திட்டம் 2017-25 உடன் இணைந்த ஒரு திட்டமான தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் மூலம் காசநோயை ஒழிப்பதற்கான முயற்சிகளை இந்தியா தீவிரப்படுத்தியது.
காசநோய் ஒழிப்பை நோக்கிய போராட்டத்தில் வேகத்தைத் தக்கவைக்க, பல்வேறு தலையீடுகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன
வயது வந்தோருக்கான பிசிஜி தடுப்பூசி பற்றிய ஆய்வுகளை நடத்துதல், புதிய மற்றும் குறுகிய சிகிச்சை முறைகள் உட்பட காசநோய் தடுப்பு சிகிச்சையை விரிவுபடுத்துதல் மற்றும் விரைவாக அளவிடுதல், விரிவான பதிவு மற்றும் அறிக்கை வழிமுறைகளுடன், காசநோய் இருப்பதாக சந்தேகிக்கப்படும் அனைத்து நபர்களுக்கும் மூலக்கூறு நோயறிதல் சோதனைக்கான அணுகலை அதிகரித்தல், காசநோய் சேவை விநியோகத்தை "ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்களுக்கு" பரவலாக்குதல் ஆகியவை இதில் அடங்கும்.
இந்தியாவின் விரிவான காசநோய் ஒழிப்பு அணுகுமுறை நேர்மறையான முடிவுகளைக் காட்டுகிறது, குறிப்பிட்ட கால இடைவெளியில் புதிய நோயாளிகள் விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் குறைதல் மற்றும் வலுவான சுகாதார பதிலளிப்பு கட்டமைப்பு. பல்வேறு துறை சார்ந்த கூட்டாண்மைகள், புதுமையான பராமரிப்புத் தீர்வுகள், சமூக ஈடுபாடு ஆகியவற்றுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளிப்பதன் மூலம், 2025-க்குள் காசநோய் இல்லாத நாடாக மாற வேண்டும் என்ற தனது இலக்கை அடைய இந்தியா நல்ல நிலையில் உள்ளது. இந்த முன்னேற்றம் உலகளாவிய சுகாதார முயற்சிகளுக்கான நாட்டின் உறுதிப்பாட்டையும், தேசிய அளவில் காசநோயைக் கையாள்வதில் கூட்டு, புதுமையான மற்றும் நோயாளியை மையமாகக் கொண்ட சுகாதார உத்திகளின் சக்தியையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
******************
TS/PKV/KV/KR
(Release ID: 2071083)
Visitor Counter : 19