அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சித் துறையானது சிறப்பு இயக்கம் 4.0-ஐ வெற்றிகரமாக மேற்கொண்டது

Posted On: 05 NOV 2024 1:52PM by PIB Chennai

அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சித் துறை (DSIR) அதன் தன்னாட்சி அமைப்புகள், அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்சில் (CSIR) மற்றும் இரண்டு பொதுத்துறை நிறுவனங்களான தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகம் (NRDC) & மத்திய மின்னணு லிமிடெட் (CEL) ஆகியவற்றுடன் இணைந்து, DSIR செயலாளர், டாக்டர்  N. கலைச்செல்வியின் வழிகாட்டுதலின் கீழ் 2 அக்டோபர் 2024 முதல் 31 அக்டோபர் 2024 வரை சிறப்பு இயக்கம் 4.0 ஐ வெற்றிகரமாக நடத்தியது. 2024 அக்டோபர் 2-ம் தேதி புதுதில்லியில் உள்ள சிஎஸ்ஐஆர் தலைமையகத்தில் தூய்மைப் பணியுடன் டிஎஸ்ஐஆர் செயலாளர் & சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநரால் இந்த இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது.

செயலாளர் டிஎஸ்ஐஆர் & சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநர் 2024 அக்டோபர் 2 அன்று சிஎஸ்ஐஆர் தலைமையகத்தில் தூய்மை இந்தியா தினம் 2024 நிகழ்ச்சியில் தூய்மைப் பணியாளர்களை பாராட்டினார். மேலும், தூய்மையே சேவை இயக்கம் 2024-ன் ஒரு பகுதியாக, டிஎஸ்ஐஆர் இணைச் செயலாளர், 2024 அக்டோபர், முதல் வாரத்தில் புதுதில்லியின் தொழில்நுட்ப பவனில் செயல்படும் டிஎஸ்ஐஆர்-ல் தூய்மைப் பணியாளர்களை கௌரவித்தார்.

டி.எஸ்.ஐ.ஆர் மற்றும் சி.பி.எஸ்.இ., அதாவது சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (சி.இ.எல்), தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகம் (என்.ஆர்.டி.சி) மற்றும் நாடு முழுவதும் உள்ள சி.எஸ்.ஐ.ஆரின் அனைத்து 37 ஆய்வகங்களிலும் இயக்கத்தின் போது 'உடல் உழைப்பு சேவைக்கு' ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் அதிகாரிகள் / ஊழியர்கள் 'தாயின் பெயரில் ஒரு மரக்கன்று' இயக்கத்தின் ஒரு பகுதியாக தூய்மை மற்றும் மரம் நடும் பணியில் பங்கேற்றனர். இதேபோன்ற மரக்கன்றுகள் நடும் பணி டி.எஸ்.ஐ.ஆர் தலைமையகத்திலும் மேற்கொள்ளப்பட்டது.

சிறப்பு இயக்கம் 4.0-ன் ஒரு பகுதியாக, அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்), வடக்கு ரயில்வேயுடன் ஒருங்கிணைந்து, புது டெல்லி ரயில் நிலையத்தில் தூய்மை இயக்கத்தை மேற்கொண்டது. சிஎஸ்ஐஆர் செயலாளரும் தலைமை இயக்குநருமான டாக்டர் என். கலைச்செல்வி மற்றும் புதுதில்லி ரயில் நிலைய இயக்குநர் திரு. மகேஷ் யாதவ் ஆகியோர் தூய்மை இயக்கத்தை முன்னின்று நடத்தினர். இந்த நிகழ்ச்சியின் போது, புதுதில்லி ரயில் நிலையத்தின் தூய்மைப்பணியாளர்களை சிஎஸ்ஐஆர் பாராட்டியது, பொதுத் தூய்மையை பராமரிப்பதில் துப்புரவுத் தொழிலாளர்களின் பங்களிப்பை சிஎஸ்ஐஆர் பாராட்டியது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில  செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2070807

***

(Release ID: 2070807)

TS/MM/AG/KR

 


(Release ID: 2070841) Visitor Counter : 25


Read this release in: English , Urdu , Hindi , Manipuri