சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறப்பு இயக்கம் 4.0: மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் நிறைவு செய்துள்ளது

Posted On: 01 NOV 2024 5:16PM by PIB Chennai

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் மற்றும் அதன் முகமைகள் 2024 அக்டோபர் 2 முதல் 31 வரை நிலுவையில் உள்ள விஷயங்களை தீர்ப்பதற்கான சிறப்பு இயக்கம் 4.0-ஐ முடித்துள்ளன.

பொதுமக்கள் குறைகள் (986), பொதுமக்கள் குறை தீர்ப்பு மேல்முறையீடுகள் (211), மேலாண்மை மைய குறிப்புகள் (அமைச்சரவை முன்மொழிவு) மற்றும் பதிவு மேலாண்மை (பழைய நேரடி / மின்-கோப்புகளை ஆய்வு செய்தல்) (25635) ஆகியவற்றில் அமைச்சகம் 100% இலக்குகளை எட்டியுள்ளது. மேலும், இந்த இயக்கத்தின் போது, கழிவுகளை அகற்றியதன் மூலம் அமைச்சகம்  ரூ.3,03,200/- வருவாய் ஈட்டியுள்ளது. இதில் அலுவலகங்கள், கட்டுமான முகாம்கள் / தளங்கள், தேசிய நெடுஞ்சாலை நீட்டிப்புகள், சுங்கச்சாவடிகள், சாலையோர வசதிகள், சாலையோர உணவகங்கள், பேருந்து நிறுத்தங்கள், மேம்பாலங்கள் போன்றவை அடங்கும்.

பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் கண்டறியப்பட்ட இலக்குகளை அடையும் பொருட்டு, மாநில ஊரக வளர்ச்சி திட்டம், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் தேசிய ஊரக வளர்ச்சிக் கழக அலுவலர்கள் இத்திட்டத்தில் தீவிரமாக பங்கேற்றனர்.

***

TS/LKS/KPG/DL




(Release ID: 2070212) Visitor Counter : 8


Read this release in: English , Urdu , Hindi