நிலக்கரி அமைச்சகம்
2024 அக்டோபரில் ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தி 84.45 மில்லியன் டன்னை எட்டியது
Posted On:
01 NOV 2024 2:59PM by PIB Chennai
2024, அக்டோபரில் ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தியில் நிலக்கரி அமைச்சகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து, 84.45 மில்லியன் டன்னை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தின் 78.57 மில்லியன் டன்னோடு ஒப்பிட இது 7.48% அதிகமாகும் . தனியார் மற்றும் பிற நிறுவனங்களின் நிலக்கரி உற்பத்தியும் கணிசமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 11.70 மில்லியன் டன் உற்பத்தியோடு ஒப்பிடும்போது 2024 அக்டோபரில் 16.59 மில்லியன் டன்னாக உற்பத்தி உயர்ந்துள்ளது. இது 41.75% குறிப்பிடத்தக்க வளர்ச்சி விகிதத்தை பிரதிபலிக்கிறது. 2024, அக்டோபர் வரையிலான நிதியாண்டில் ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தி 537.45 மில்லியன் டன்னை எட்டியது, இது 2023-24 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 506.56 மில்லியன் டன்னிலிருந்து அதிகரித்து, 6.10% வளர்ச்சியைக் குறிக்கிறது.
நிலக்கரி அனுப்புதல் 2024, அக்டோபரில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் கண்டு 82.89 மில்லியன் டன்னை எட்டியது. இது அக்டோபர் 2023-ல் பதிவு செய்யப்பட்ட 79.25 மில்லியன் டன்னை விட 4.60% அதிகரிப்பைக் காட்டுகிறது. தனியார் மற்றும் பிற நிறுவனங்களில் இருந்து நிலக்கரி அனுப்புதலும் 2024, அக்டோபரில் 16.18 மில்லியன் டன்னாக அதிகரித்தது. இது 2023, அக்டோபரில் 11.83 மில்லியன் டன்னாக இருந்தது, இது 36.83% வளர்ச்சியைக் குறிக்கிறது. ஒட்டுமொத்த நிலக்கரி அனுப்புதல் (அக்டோபர் 2024 வரை) 2024-25 நிதியாண்டில் 571.39 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது, இது 2023-24 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 541.51 மில்லியன் டன்னாக இருந்தது, இது 5.52% வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது.
*****
TS/SMB/RS/KV
(Release ID: 2070141)
Visitor Counter : 49