குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்குக் குடியரசுத் துணைத் தலைவர் வாழ்த்து

Posted On: 30 OCT 2024 6:54PM by PIB Chennai

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டுக் குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் வெளியிட்டுள்ள  வாழ்த்துச் செய்தி:

"தீபாவளித் திருநாளை முன்னிட்டு  நாட்டு மக்களுக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாரதத்தில் மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள நமது நாட்டைச் சேர்ந்த மக்களால் பயபக்தியுடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்படும் தீபாவளி, இருளுக்கு எதிரான ஒளியின் வெற்றியையும், விரக்திக்கு எதிரான நம்பிக்கையையும், அறியாமைக்கு எதிரான அறிவையும் குறிக்கிறது. தீபாவளிப் பண்டிகை நம் அனைவருக்குமான நேர்மையின் செய்தியை சுமந்து வருகிறது. நமது கடமைகளை நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் நிறைவேற்ற வலியுறுத்துகிறது.

இந்த தீபாவளியையொட்டி அயோத்தியில் நடைபெறும் தீபோத்சவம் உண்மையிலேயே ஒரு தெய்வீகக் காட்சியாக இருக்கும். தீபங்களின் பிரகாசம் உலகத்தையும், நமது மனம், ஆன்மாவின் உள் கருவறையையும் ஒளிரச் செய்யும்போது நமது மக்களை கொண்டாட்டத்தில் ஒன்றிணைக்கும்.

நாம் விளக்குகளை ஏற்றும் போது, தீபாவளியின் பிரகாசம் நமது பாதையை ஒளிரச் செய்து, ஒற்றுமை, வளம், எல்லையற்ற முன்னேற்றம் ஆகியவை கொண்ட எதிர்காலத்தை நோக்கி பாரதத்தை வழிநடத்தட்டும். இந்தப் பண்டிகையின் ஒளி, நம் இதயங்களில் ஞானம், இரக்கம், அமைதி ஆகியவற்றை ஊக்குவிக்கட்டும். இது நம் வாழ்க்கையை வளப்படுத்தி நமது சமூகங்களை வலுப்படுத்தட்டும்.

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

***

PLM/DL


(Release ID: 2069679) Visitor Counter : 33