சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறுபான்மையினர் நல அமைச்சகத்தில் தேசிய ஒற்றுமை தினம் கடைபிடிக்கப்பட்டது

प्रविष्टि तिथि: 30 OCT 2024 5:30PM by PIB Chennai

சிறுபான்மையினர் நல  அமைச்சகம் இன்று (அக்டோபர் 30, 2024) தேசிய ஒற்றுமை தினத்தை கடைபிடித்தது. மந்தன் அரங்கில் நடைபெற்ற உறுதிமொழி நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நல அமைச்சகத்தின் செயலாளர், அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு தேசிய ஒற்றுமை தின உறுதிமொழியை வாசித்து ஏற்க செய்தார்.

இந்நிகழ்ச்சியின் போது, பங்கேற்பாளர்கள் நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பிற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர். இந்த உறுதிமொழி நாட்டு மக்களிடையே இந்த செய்தியை பரப்புவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்கு பார்வை மற்றும் செயல்களால்  நாட்டை ஒன்றிணைக்கும் உணர்வையும் எடுத்துக்காட்டியது.

***

TS/IR/RS/DL


(रिलीज़ आईडी: 2069644) आगंतुक पटल : 71
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri , Bengali-TR