மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
இந்திய தேசிய இணையப் பரிமாற்ற இணைப்பகம், புதுதில்லியில் உள்ள உலக வர்த்தக மையத்தில் புதிய அலுவலகத்தை திறந்துள்ளது
Posted On:
30 OCT 2024 1:51PM by PIB Chennai
இந்திய தேசிய இணைய பரிமாற்ற இணைப்பகத்தின் (என்ஐஎக்ஸ்ஐ - NIXI) புதிய அலுவலகம் புதுதில்லி, நௌரோஜி நகரில் உள்ள உலக வர்த்தக மையத்தில் இன்று (30.10.2024) திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மின்னணு - தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளரும், என்ஐஎக்ஸ்ஐ தலைவருமான திரு எஸ் கிருஷ்ணன் பங்கேற்று புதிய அலுவலகத்தைத் திறந்து வைத்தார். இது இந்தியாவின் இணைய உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் டிஜிட்டல் வளர்ச்சியை வளர்ப்பதற்கும் நிக்ஸியின் தற்போதைய முயற்சிகளில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது.
2023-24-க்கான என்ஐஎக்ஸ்ஐ-யின் பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு (சிஎஸ்ஆர்) நடவடிக்கை அறிக்கை:
இந்த விழாவில் என்ஐஎக்ஸ்ஜ-யின் சிஎஸ்ஆர் நடவடிக்கை அறிக்கை வெளியீடும் இடம்பெற்றது. இது பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வில், நிறுவனத்தின் சாதனைகளையும் பணிகளையும் எடுத்துக்காட்டுகிறது. டிஜிட்டல் கல்வியறிவை ஊக்குவித்தல், இணைய அணுகலை விரிவுபடுத்துதல், சமூக வளர்ச்சிக்கு பங்களிப்பதில் என்ஐஎக்ஸ்ஐ-யின் பணிகள் உள்ளிட்டவை இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. இது எதிர்கால இலக்குகளையும் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதார, சமூக அதிகாரமளித்தல் முயற்சிகளை ஆதரிப்பதற்கான நடைமுறைகள் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
***
(Release ID: 2069493)
TS/PLM/AG/RR
(Release ID: 2069545)
Visitor Counter : 76