அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
ஜிஎன்எஸ்எஸ் அடிப்படையிலான வழிசெலுத்தலுக்கு முக்கியமான பூமத்திய ரேகை அயனோஸ்பெரிக் செயல்முறைகளைப் புரிந்துகொள்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள மாதிரி செயல்முறை
Posted On:
30 OCT 2024 12:38PM by PIB Chennai
இந்தியாவின் தெற்கு முனையில் உள்ள தரை அடிப்படையிலான காந்தமானிகள் மூலம் பூமியின் அயனோஸ்பியரில் ஈக்வடோரியல் எலக்ட்ரோஜெட்களை விஞ்ஞானிகள் கண்காணிக்கின்றனர். இந்த நிலையில், செயற்கைக்கோள் சுற்றுப்பாதை இயக்கவியல், குளோபல் பொசிஷனிங் சிஸ்டம்ஸ் மற்றும் பிற செயற்கைக்கோள் தகவல் தொடர்பு இணைப்புகள் மற்றும் மின் சக்தி கட்டங்களை பாதிக்கக்கூடிய பூமத்திய ரேகை மின்னியக்கவியல் செயல்முறைகளைப் புரிந்துகொள்ள ஒரு புதிய அனுபவ மாதிரியை உருவாக்கியுள்ளனர்.
பூமியின் புவி காந்த பூமத்திய ரேகை இந்தியாவின் தெற்கு முனைக்கு மிக அருகில் செல்கிறது. அங்கு பூமத்திய ரேகை எலக்ட்ரோஜெட் (EEJ) என அழைக்கப்படும் 100 கேஏ வரிசையின் தனித்துவமான மற்றும் மிகவும் வலுவான மின்னோட்டம், மேல் வளிமண்டலத்தில் சுமார் 105-110 கிலோ மீட்டர் உயரத்தில் பாய்கிறது. இந்த தீவிர மின்னோட்ட ஜெட் காரணமாக, பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள புவி காந்தப்புலம் சில நூறு நானோ டெஸ்லா (nT) வரை தனித்துவமாக மேம்படுத்தப்படுகிறது.
புவிகாந்தப்புல விரிவாக்கம் மூலம் இந்த மின்னோட்ட செறிவை அளவிடுவது அயனி மண்டல மின் புலத்தின் மாறுபாடு பற்றிய முக்கியமான புரிதலை வழங்குகிறது. எனவே, இஇஜே (EEJ) மாறுபாடுகளைப் புரிந்துகொள்வதும் மாதிரியாக்குவதும் முக்கியமான பயன்பாடுகளைக் கொண்டிருக்கும்.
இந்தியாவின் தென் முனைக்கு மிக அருகில் உள்ள திருநெல்வேலி பூமத்திய ரேகை நிலையம், தரை அடிப்படையிலான காந்தமானிகளைப் பயன்படுத்தி மின்னோட்டத்தை அளவிடுகிறது.
20 ஆண்டுகளுக்கும் மேலாக நீண்டகால கண்காணிப்பில் இருந்து இஇஜே மாறுபாடுகளைப் புரிந்துகொண்டு, அறிவியல்- தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான, நவி மும்பையில் உள்ள இந்திய புவி காந்தவியல் நிறுவனத்தின் (IIG) விஞ்ஞானிகள், இஇஜே மின்னோட்டத்தை மிகவும் துல்லியமாக கணிக்கக்கூடிய ஒரு அனுபவ மாதிரியை உருவாக்கியுள்ளனர். இந்த ஆய்வு, ஸ்பேஸ் வெதர் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
"இந்திய பூமத்திய ரேகை எலக்ட்ரோஜெட் (IEEJ) மாதிரி" என்று பெயரிடப்பட்ட இந்த மாதிரி, இந்தியத் துறையில் ஈக்வடோரியல் எலக்ட்ரோஜெட்டை துல்லியமாக கணிக்கக்கூடிய முதல் அனுபவ மாதிரியாகும். தனித்துவமான பூமத்திய ரேகை அயனோஸ்பெரிக் செயல்முறைகளைப் புரிந்துகொள்ள இந்த மாதிரியைப் பயன்படுத்தலாம்.
***
(Release ID: 2069472)
TS/PLM/AG/RR
(Release ID: 2069541)
Visitor Counter : 20