அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

ஒளிரும் நானோ பொருட்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட மை போலி ஆவண நகலெடுப்பைத் தடுக்கும்

Posted On: 30 OCT 2024 12:37PM by PIB Chennai

ஒளிரும் நானோ பொருட்களுடன் உருவாக்கப்பட்ட மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட ஒரு புதிய மை, நாணயம், சான்றிதழ்கள்,  வணிக முத்திரைப் பொருட்கள் மற்றும் மருந்துகளில் போலிகள் தயாரிக்கப்படுவதைத் தடுக்க உதவும்.

கள்ளநோட்டு என்பது உலகளவில் வளர்ந்து வரும் சவாலாக உள்ளது. ஆராய்ச்சியாளர்கள் அதைத் தடுக்க தனித்துவமான வழிகளைக் கண்டுபிடிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அரிய அயனிகளின் ஒளிரும் பண்புகள், சிறப்பியல்பு உமிழ்வுகள் நீண்ட காலமாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வந்தன.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (ஐ.என்.எஸ்.டி) விஞ்ஞானிகள், அரிய பூமிப் பொருட்களைப் பயன்படுத்தி, அரிய ஒளிரும் நானோ பொருட்களை அடிப்படையாகக் கொண்ட பாதுகாப்பு மிக்க  மையைக் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த மை  பொதுவாக புற ஊதா ஒளியின் கீழ் மட்டுமே தெரியும் பாதுகாப்பு அம்சங்களாக உள்ள ரகசிய குறியீடுகள் மற்றும் எளிதில் நகலாக்கக் கூடிய வரம்புகளைக் கடக்க உதவும் என்பதோடு

புதிய மை பல்வேறு ஒளி அலைநீளங்களின் கீழ் வெவ்வேறு வண்ணங்களைக் காண்பிக்கும் திறன் மூலம் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களை வழங்குகிறது. குறிப்பாக, இந்த மை 365என்எம் ஒளியின் கீழ் துடிப்பான நீலமாகவும், 395 என்எம் ஒளியின் கீழ் இளஞ்சிவப்பு நிறமாகவும், 980 என்எம் அருகே அகச்சிவப்பாகவும், ஆரஞ்சு - சிவப்பு நிறமாகவும் தோன்றுகிறது.

இந்த நானோ பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் ஒளிரும் மை போலி ஆவணங்கள், கள்ளநோட்டுகள் தயாரிப்பை தடுப்பதற்கான குறிப்பிடத்தக்க ஆற்றலைக் கொண்டுள்ளது. நாணயம், சான்றிதழ்கள், மருந்துகள் மற்றும் வணிக முத்திரை தயாரிப்புகள் உட்பட போலிகளைக் கண்டறிய இதைப் பயன்படுத்தலாம். இது நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு, தங்கள் பொருட்களின் நம்பகத்தன்மையை எளிதில் சரிபார்க்க அனுமதிக்கிறது. கள்ளநோட்டுகளைக் கண்டறிய எளிய மற்றும் சக்திவாய்ந்த உபகரணமாக விளங்குகிறது.

-----

(Release ID 2069470)

TS/PKV/KPG/RR


(Release ID: 2069498) Visitor Counter : 24


Read this release in: English , Urdu , Hindi