தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம்
இந்தியாவின் இணையத் தூய்மை இயக்கம் இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் பாதுகாப்பான டிஜிட்டல் இந்தியாவை உருவாக்கும் முயற்சி
Posted On:
29 OCT 2024 5:52PM by PIB Chennai
தேசிய பாதுகாப்பு கவுன்சில் அலுவலகமும் இந்திய ஒருங்கிணைந்த சேவை நிறுவனமும் இந்தியாவின் இணையத் தூய்மை இயக்கமான சைபர் ஸ்வச்தா அபியான்-னின் ஒரு பகுதியாக குவாட் சைபர் சவாலை ஏற்பாடு செய்தன.
பொறுப்பான இணையச் சூழல் அமைப்புகளை வலுப்படுத்துவதற்கும், பொது வளங்களை மேம்படுத்துவதற்கும், இணைய பாதுகாப்பு விழிப்புணர்வை அதிகரிப்பதற்கும் குவாட் தலைவர்களால் குவாட் சைபர் சவால் நிகழ்வு அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு சவாலின் கருப்பொருள் இணையப் பாதுகாப்புக் கல்வியை ஊக்குவித்தலும் வலுவான பணியாளர்களை உருவாக்குதலும் என்பதாகும்.
இந்த நிகழ்வில், புகழ்பெற்ற இணையதளப் பாதுகாப்பு வல்லுநர்கள், மாணவர்கள், ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வுப் பயிலரங்குகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்வில் பத்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் முதல்வர்களும், ஆசிரியர்களும் மாணவர்களும் பங்கேற்றனர்.
இணையச் சட்டம், இணையக் குற்றங்கள், விசாரணை அம்சங்கள், டிஜிட்டல் தடயவியல், குழந்தைகளுக்கான ஆன்லைன் பாதுகாப்பு முயற்சிகள் குறித்து இதில் நிபுணர்கள் பேசினர்.
----
AD/PLM/KPG/DL
(Release ID: 2069359)
Visitor Counter : 21