சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
'ஆக்ட் 4 டிஸ்லெக்ஸியா' இயக்கத்தின் ஒரு பகுதியாக குடியரசுத் தலைவர் மாளிகை உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள முக்கிய கட்டிடங்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் சிவப்பு நிறத்தில் ஒளிரச் செய்யப்படும்
Posted On:
28 OCT 2024 4:41PM by PIB Chennai
நாடு தழுவிய 'ஆக்ட் 4 டிஸ்லெக்ஸியா' இயக்கத்தின் ஒரு பகுதியாக, அரசின் மிக முக்கிய அலுவலகங்கள் மற்றும் தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை, நாடாளுமன்ற கட்டிடம், வடக்கு மற்றும் தெற்கு பகுதிகள், இந்தியா கேட் ஆகியவை கற்றல் குறைபாடு விழிப்புணர்வுக்காக சிவப்பு நிறத்தில் ஒளிரச் செய்யப்பட்டுள்ளன.
பாட்னா, ராஞ்சி, ஜெய்ப்பூர், கோஹிமா, சிம்லா மற்றும் மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் இது கடைபிடிக்கப்படுகிறது. இது குழந்தைகளின் கற்றல் குறைபாடு குறித்த பாதகமான பொதுக்கருத்தை அகற்ற வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது. கற்றல் குறைபாடு குறித்த தெளிவான புரிதலை இந்த நிகழ்வு மக்களிடையே ஏற்படுத்துகிறது.
35 மில்லியன் மாணவர்கள் உட்பட நாட்டின் மக்கள்தொகையில் 20% பேர் கற்றல் குறைபாடுகளுடன் உள்ள நிலையில், அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. இது யுனெஸ்கோ மகாத்மா காந்தி அமைதி மற்றும் நிலையான வளர்ச்சிக்கான கல்வி நிறுவனம் மற்றும் சேஞ்ச்இங்க் அறக்கட்டளை ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
'வாக்4டிஸ்லெக்ஸியா'வை மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையின் செயலாளர் திரு ராஜேஷ் அகர்வால், இந்தியாவில் உள்ள ஐ.நா ஒருங்கிணைப்பாளர் திரு. ஷோம்பி ஷார்ப் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த நடைப்பயணம் கற்றல் குறைபாடுக்காக செயல்படுவதற்கான கூட்டு நடவடிக்கையைக் குறிக்கிறது, கற்றல் குறைபாடுகள் உள்ள நபர்களுக்கு சம வாய்ப்புகள் மற்றும் ஆதரவின் அவசியத்தை வலியுறுத்துகிறது. 300 க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் பங்கேற்ற இந்த நடைப்பயணம், அக்டோபர் 27- அன்று காலை விஜய் சவுக்கிலிருந்து இந்தியா கேட் வரை நடைபெற்றது.
***
TS/IR/AG/DL
(Release ID: 2068967)
Visitor Counter : 46