மக்களவை செயலகம்
அனைவரையும் உள்ளடக்கியதாக பொதுக் கொள்கைகள் அமைய வேண்டும் - மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா
Posted On:
27 OCT 2024 10:00PM by PIB Chennai
நமது சமூகத்தின் பன்முகத் தேவைகளை அங்கீகரித்து, பொதுக் கொள்கைகள் ஒவ்வொருவரையும் உள்ளடக்கும் வகையில் உருவாக்கப்பட வேண்டும் என்று மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா கூறியுள்ளார். கொள்கைகள் அனைத்து தனிநபர்களின் குரல்களையும் அனுபவங்களையும் பிரதிபலிக்கும்போது, அவை ஜனநாயக செயல்முறையை தீவிரப்படுத்துகின்றன என்று அவர் தெரிவித்துள்ளார்.
புவனேஸ்வரில் உள்ள கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆப் இண்டஸ்ட்ரியல் டெக்னாலஜி நிறுவனத்தின் பொதுக் கொள்கைக்கான பள்ளியை இன்று (28.10.2024) அவர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய மக்களவைத் தலைவர், சமூகத்தின் கூட்டு சக்தியைப் பயன்படுத்துவதன் மூலம், சமூகப் பிணைப்புகளை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், நிஜ உலக சவால்களை திறம்பட எதிர்கொள்ள முடியும் என்று கூறினார்.
மக்கள் தங்கள் சுதந்திரத்தையும் உரிமைகளையும் பாதுகாக்க கூட்டு உறுதிப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என்று அவர் கூறினார். நமது ஜனநாயகத்தை வலுப்படுத்தும் பன்முகத்தன்மையின் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார். இந்தியாவின் வளமான கலாச்சாரம், மொழிகள், பாரம்பரியங்கள் அதன் துடிப்புக்கு பங்களிப்பு செய்கின்றன என்று அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் தற்போது சட்டத்தின் ஆட்சி முறையாக நடைபெற்று வருவதால் அந்நிய முதலீடு அதிகரித்து வருகிறது என்றும் அவர் கூறினார்.
இந்தியாவின் அந்தஸ்து உலகளவில் உயர்ந்து வருவதாகவும், உலகமே இந்தியாவை ஆர்வத்துடன் கவனித்து வருவதாகவும் மக்களவைத் தலைவர் குறிப்பிட்டார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் திறமையான தலைமையும் தொலைநோக்கு அணுகுமுறையும் பல்வேறு துறைகளில் இந்தியாவை முன்னோக்கி நகர்த்தியுள்ளது என்று திரு ஓம் பிர்லா தெரிவித்தார்.
----
TS/PLM/KPG/KR/DL
(Release ID: 2068922)
Visitor Counter : 56