நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தரமற்ற தலைக்கவசங்களுக்கு எதிராக நுகர்வோர் விவகாரங்கள் துறை சிறப்பு இயக்கத்தை தொடங்குகிறது

Posted On: 26 OCT 2024 10:47AM by PIB Chennai

 

 சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், தரமற்ற தலைக்கவசங்களிலிருந்து நுகர்வோரைப் பாதுகாப்பதற்கும், இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு இணக்கமற்ற தலைக்கவசங்களை  விற்கும் உற்பத்தியாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களைக் குறிவைத்து நாடு தழுவிய இயக்கத்தைத் தொடங்குமாறு நுகர்வோர் விவகாரத் துறைமாவட்ட ஆட்சியர்கள்  மற்றும் மாவட்ட நீதிபதிகளுக்கு  கடிதம் எழுதியுள்ளது. சந்தையில் கிடைக்கும் தலைக்கவசங்களின் தரம் மற்றும் சாலையில் உயிர்களைப் பாதுகாப்பதில் அவற்றின் முக்கிய பங்கு குறித்து வளர்ந்து வரும் கவலைகளுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளது.

பிஐஎஸ் சான்றிதழ் இல்லாத தரமற்ற தலைக்கவசங்கள்  சாலையோரங்களில் விற்பனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது. இது பொது பாதுகாப்புக்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்துவதுடன்சாலை விபத்துக்களில் ஏராளமான இறப்புகளுக்குக் காரணமாகிறது. எனவே, இந்தப் பிரச்சினையை நேருக்கு நேர் எதிர்கொள்ள வேண்டிய அவசரத் தேவை உள்ளது. பிஐஎஸ் உரிமம் இல்லாமல் செயல்படும் அல்லது போலி ஐஎஸ்ஐ மார்க் பயன்படுத்தும் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோருக்கு இந்த இணக்கமற்ற தயாரிப்புகளை விற்கும் சில்லறை விற்பனையாளர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைக்கு அரசு அழைப்பு விடுக்கிறது. தலைக்கவசு  உற்பத்தியாளர் பிஐஎஸ்  வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் பிஐஎஸ் உரிமம் பெற்றுள்ளாரா என்பதை நுகர்வோர் சரிபார்க்கலாம்.

இந்த விஷயத்தில் குடிமக்களிடையே விழிப்புணர்வைப் பரப்ப வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் அதே வேளையில், நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் நிதி காரே, தலைக்கவசங்கள் உயிர்களைக் காப்பாற்றுகின்றன, ஆனால் அவை நல்ல தரமாக இருந்தால் மட்டுமே, பாதுகாப்பற்ற தலைக்கவசங்களை சந்தையில் இருந்து அகற்றுவதற்கும், பிஐஎஸ்-சான்றளிக்கப்பட்ட தயாரிப்புகளின் முக்கியத்துவத்தைப் பற்றி நுகர்வோருக்குக் கற்பிப்பதற்கும் இந்த முயற்சி முக்கியமானது. நமது குடிமக்களின் பாதுகாப்பிற்காக இந்தப் பிரச்சாரத்தில் தீவிரமாக பங்கேற்குமாறு அனைத்து பங்குதாரர்களையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்று அழைப்பு விடுத்தார்.

மோட்டார் வாகனச் சட்டம் 1988-ன் கீழ் தலைக்கவசம்  அணிவதை அரசு ஏற்கனவே கட்டாயமாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சாலை விபத்துகளில் உயிரிழப்புகளைத் தடுக்க இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு இது ஒரு முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கையாகும். இருப்பினும், தலைக்கவசத்தின்  செயல்திறன் அதன் தரத்தை மிகவும் சார்ந்துள்ளது.

இந்த விஷயத்தில் மாவட்ட அதிகாரிகள் தனிப்பட்ட அக்கறை எடுத்து, தரக்கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்துவதை உறுதி செய்ய சிறப்பு பிரச்சாரத்தை தொடங்குமாறு துறை கேட்டுக்கொள்கிறது. இந்த இயக்கம் அதன் தாக்கத்தை அதிகரிக்க தற்போதுள்ள சாலை பாதுகாப்பு பிரச்சாரங்களுடன் ஒருங்கிணைக்கப்படும். விதிமீறல்களைக் கண்டறிந்து நிவர்த்தி செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் பிஐஎஸ் களப்பணியாளர்கள்  ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

இந்த முயற்சி நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பில் அரசின் உறுதிப்பாட்டைப் பறைசாற்றுகிறது. தரமற்ற தலைக்கவசங்களை சந்தையில் இருந்து அகற்றுவதன் மூலம், தவிர்க்கக்கூடிய சாலை விபத்து இறப்புகளைத் தடுப்பது மற்றும் உயர்தர பாதுகாப்பு உபகரணங்களை ஊக்குவிப்பதை துறை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தப் பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்க மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் காவல் துறைகளுடன் தொடர்ந்து ஈடுபடுமாறு துறையின் கிளை அலுவலகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தலைக்கவசம் மிகவும் முக்கியமான தயாரிப்பு என்பதாலும், அவற்றின் தரமற்ற உற்பத்தி உயிர் பாதுகாப்பை மோசமாக பாதிக்கிறது என்பதாலும், இன்றுவரை, 162 உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன / காலாவதியாகியுள்ளன என்பதை தெரிவிக்க வேண்டியது அவசியம். மேலும், 4151:2015 என்ற எண்ணில் இதுவரை மொத்தம் 27 சோதனைகள் நடத்தப்பட்டு பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம்ஜூன் 1, 2021 நிலவரப்படி தரக் கட்டுப்பாட்டு ஆணையை  அமல்படுத்தியுள்ளது, அனைத்து தலைக்கவசங்களும்  தரநிலை IS 4151: 2015 உடன் இணங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளது. இந்தச் சான்றிதழ் இல்லாமல் தயாரிக்கப்பட்ட அல்லது விற்கப்படும் எந்தவொரு பொருளும் இந்திய தர நிர்ணய அமைவனச் சட்டம், 2016- மீறுகிறது. சாலையோரங்களில் விற்கப்படும் பல ஹெல்மெட்களுக்கு கட்டாய பிஐஎஸ் சான்றிதழ் இல்லை என்பது கவனிக்கப்பட்டுள்ளது, இது நுகர்வோருக்கு குறிப்பிடத்தக்க ஆபத்துகளை ஏற்படுத்துகிறது.

*****

PKV/KV

 

 

 




(Release ID: 2068416) Visitor Counter : 35