பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
ஐஐடி கான்பூருடன் இணைந்து பொதுக் கொள்கை மற்றும் நல்லாட்சி குறித்த 2வது வெபினார்
Posted On:
26 OCT 2024 11:24AM by PIB Chennai
நல்லாட்சிக்கான தேசியமையம் என்சிஜிஜி, கான்பூர் ஐஐடி-யுடன் இணைந்து, பொதுக் கொள்கை மற்றும் நல்லாட்சி குறித்த 2வது இணைய வழி கருத்தரங்கை( வெபினார்) அக்டோபர் 24 அன்று நிறைவு செய்தது. இந்த வெபினாருக்கு நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை செயலாளர் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய மையத்தின் தலைமை இயக்குநர் திரு வி.ஸ்ரீனிவாஸ் தலைமை தாங்கினார்.
வெபினாரின் முதல் பேச்சாளர் பாதுகாப்புத்துறை முன்னாள் செயலர் டாக்டர் அஜய் குமார், வெபினாரின் இரண்டாவது பேச்சாளர் ஐ.ஐ.டி கான்பூரின் பொருளாதார அறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் விமல் குமார் ஆவர்.
டாக்டர் அஜய் குமார் பொதுக் கொள்கையில் உள்ள சவால்கள் என்ற தலைப்பில் விரிவுரை நிகழ்த்தினார், கொள்கை வகுப்பதில் இந்திய அரசின் பங்கு மற்றும் காலப்போக்கில் கொள்கை உருவாக்கத்தில் அதன் அணுகுமுறையை எவ்வாறு மாற்றியுள்ளது என்பதை எடுத்துரைத்தார். பொதுக் கொள்கைகளில் மாற்றங்கள் கட்டங்களாக அளவீடு செய்யப்பட வேண்டும், நிலப் பதிவுகளின் டிஜிட்டல் மயமாக்கலை முன்னிலைப்படுத்துவதன் மூலம் புதிய கொள்கைகளை உருவாக்கும்போது எதிர்கொள்ளும் சவால்களைத் தணிப்பதில் டிஜிட்டல் மயமாக்கலின் தாக்கம் ஆகியவற்றை அவரது விரிவுரை மேலும் எடுத்துக்காட்டியது. முடிவெடுப்பதில் தரவுகளைப் பயன்படுத்துவது குறித்தும் அவர் எடுத்துரைத்தார். கொள்கை வகுப்பதில் உள்ள பல்வேறு அணுகுமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்த அவர், கொள்கை உருவாக்கும் செயல்முறை பல்வேறு பங்குதாரர்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பொதுக் கொள்கையில் உள்ள சவால்கள் குறித்து விவாதித்த அவர், முற்போக்கான கொள்கைகளை ஊக்குவித்தல் போன்ற தீர்வுகளையும் பரிந்துரைத்தார்.
வெபினாரின் இரண்டாவது பேச்சாளர் பேராசிரியர் விமல் குமார், பிளாட்ஃபார்ம் பிசினஸ் மாடல் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தில் அவற்றின் ஒழுங்குமுறை குறித்து தனது விரிவுரையை வழங்கினார். கைவினைஞர்களின் ஒற்றை உற்பத்தியிலிருந்து, வெகுஜன உற்பத்தி வரை இந்தியாவில் வணிகத்தின் விரைவான வரலாற்றைப் பற்றி விவாதித்து அவர் தமது விரிவுரையைத் தொடங்கினார். எந்தவொரு வெற்றிகரமான வணிக மாதிரிக்கும் நெட்வொர்க் மற்றும் பிளாட்ஃபார்ம் உருவாக்கத்தின் முக்கியத்துவத்தையும் அவரது விரிவுரை பரிந்துரைத்தது. கட்டண நெட்வொர்க்குகள், சமூக ஊடகங்கள், செய்தித்தாள் போன்ற பாரம்பரிய ஊடகங்கள், அமேசான் & பிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் தளங்கள், ஆப்பிளின் ஆப் ஸ்டோர் மற்றும் பிற உள்ளிட்ட பல்வேறு வணிக தளங்களின் மாறுபட்ட பயன்பாட்டை அவர் வலியுறுத்தினார். பி.எம்.டபிள்யூ மற்றும் உபெர் இடையேயான ஒப்பீட்டை வழக்கு ஆய்வுகளாகப் பயன்படுத்தி டிஜிட்டல் தளத்தின் முக்கியத்துவத்துடன் அவர் தனது விரிவுரையை முடித்தார்.
என்.சி.ஜி.ஜி., இணை பேராசிரியர் டாக்டர் ஹிமான்ஷி ரஸ்தோகி நன்றி கூறி வெபினார் நிறைவடைந்தது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் டாக்டர் ரஸ்தோகி தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். வெபினாருக்கு தலைமை தாங்கியதற்காக டிஏஆர்பிஜி செயலாளர் மற்றும் என்சிஜிஜி தலைமை இயக்குநர் திரு வி. ஸ்ரீனிவாஸுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
*****
PKV/KV
(Release ID: 2068415)
Visitor Counter : 38